மகளிர் உரிமைத்தொகைதிட்ட விண்ணப்பங்கள் பதிவேற்றும் 2-ம் கட்ட முகாம்

மகளிர் உரிமைத்தொகைதிட்ட விண்ணப்பங்கள் பதிவேற்றும் 2-ம் கட்ட முகாமை கலெக்டர் பாஸ்கரபாண்டியன் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
மகளிர் உரிமைத்தொகை திட்ட விண்ணப்பங்கள் பதிவேற்றும் 2-ம் கட்ட முகாமை கலெக்டர் பாஸ்கரபாண்டியன் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
திருப்பத்தூர் மாவட்டத்தில் கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டத்தின் கீழ் விண்ணப்பங்கள் பதிவேற்றம் செய்யும் முதல் கட்ட முகாம் முடிவடைந்தது. அதைத்தொடர்ந்து 2-வது கட்ட முகாம் நேற்று ெதாடங்கியது.
திருப்பத்தூர் நகராட்சி டி.எம்.எஸ்.பள்ளி அருகே, அரசு மீனாட்சி மகளிர் மேல்நிலைப்பள்ளி, ஒய்.எம்.சி.ஏ. பள்ளி ஆகிய பகுதிகளில் நடைபெற்றுவரும் முகாம்களை கலெக்டர் பாஸ்கரபாண்டியன் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
மேலும் அரசு மீனாட்சி மகளிர் மேல்நிலைப்பள்ளியில் கற்றல் திறன் குறித்து அவர் ஆய்வு செய்தார்.
கலைஞர் மகளிர் உரிமைத்தொகை திட்டத்தின் கீழ் குடும்ப தலைவிகளிடமிருந்து பெறப்படுகின்ற விண்ணப்பங்களை பதிவேற்றம் செய்யும் பணிகளை உடனடியாக மேற்கொள்ளப்பட வேண்டுமென சம்பந்தப்பட்ட அலுவலர்களுக்கு அறிவுரைகளை வழங்கினார். அப்போது மாவட்ட வருவாய் அலுவலர் வளர்மதி, வருவாய் கோட்டாட்சியர் பானு, மாவட்ட ஆதிதிராவிடர் நல அலுவலர் ஜெயகுமார், தாசில்தார் சிவப்பிரகாசம் உள்ளிட்ட பலர் உடனிருந்தனர்.
இதேபோல் நாட்டறம்பள்ளி ஒன்றிய பகுதிக்கு உட்பட்ட கொத்தூர் கிராமம் காந்திநகர் ரேஷன் கடையில் நேற்று தன்னார்வலர்கள் மூலம் கலைஞரின் உரிமைத்தொகை திட்டத்திற்கான விண்ணப்பங்கள் பதிவேற்றம் செய்யும் பணி நடைபெற்று வருவதை தாசில்தார் குமார் தலைமையில் வருவாய் துறையினர் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.திருப்பத்தூர் நகராட்சி டி.எம்.எஸ்.பள்ளி அருகே, அரசு மீனாட்சி மகளிர் மேல்நிலைப்பள்ளி, ஒய்.எம்.சி.ஏ. பள்ளி ஆகிய பகுதிகளில் நடைபெற்றுவரும் முகாம்களை கலெக்டர் பாஸ்கரபாண்டியன் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
மேலும் அரசு மீனாட்சி மகளிர் மேல்நிலைப்பள்ளியில் கற்றல் திறன் குறித்து அவர் ஆய்வு செய்தார்.
கலைஞர் மகளிர் உரிமைத் திட்டத்தின் கீழ் குடும்ப தலைவிகளிடமிருந்து பெறப்படுகின்ற விண்ணப்பங்களை பதிவேற்றம் செய்யும் பணிகளை உனடடியாக மேற்கொள்ளப்பட வேண்டுமென சம்மந்தப்பட்ட அலுவலர்களுக்கு அறிவுரைகளை வழங்கினார். அப்போது மாவட்ட வருவாய் அலுவலர் வளர்மதி, வருவாய் கோட்டாட்சியர் பானு, மாவட்ட ஆதிதிராவிடர் நல அலுவலர் ஜெயகுமார், தாசில்தார் சிவப்பிரகாசம் உள்ளிட்ட பலர்உடனிருந்தனர்.
இதேபோல் நாட்டறம்பள்ளி ஒன்றிய பகுதிக்கு உட்பட்ட கொத்தூர் கிராமம் காந்திநகர் ரேஷன் கடையில் நேற்று தன்னார்வலர்கள் மூலம் கலைஞரின் உரிமை திட்டத்திற்கான விண்ணப்பங்கள் பதிவேற்றம் செய்யும் பணி நடைபெற்று வருவதை தாசில்தார் குமார் தலைமையில் வருவாய் துறையினர் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.