3 மாற்றுத்திறனாளிகளுக்கு தனியார் நிறுவனத்தில் வேலை

3 மாற்றுத்திறனாளிகளுக்கு தனியார் நிறுவனத்தில் வேலைக்கான பணியாணை வழங்கப்பட்டது.
ராணிப்பேட்டை
வாலாஜா அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் நடந்த மாற்றுத் திறனாளிகளுக்கான ஒருங்கிணைந்த சேவைகள் மற்றும் அடையாள அட்டைகள் வழங்கும் முகாமில், சோளிங்கர் தாலுகா பெருங்காயத்தை சேர்ந்த விஜயகுமார், ஆற்காடு தாலுகா மாசாபேட்டையை சேர்ந்த சந்திரன், வாலாஜா தாலுகா கொண்ட குப்பத்தைச் சேர்ந்த யுவராணி ஆகிய 3 மாற்றுத்திறனாளிகள் வேலை வேண்டி விண்ணப்பித்திருந்தனர்.
கலெக்டர் பாஸ்கர பாண்டியனின் முயற்சியால் இந்த 3 பேருக்கும் ராணிப்பேட்டை சிப்காட் தொழிற்பேட்டையில் இயங்கி வரும் தனியார் நிறுவனத்தில் பணி வழங்கப்பட்டது. அதற்கான பணி நியமன ஆணையை மாவட்ட கலெக்டர் வழங்கினார்.
Related Tags :
Next Story