முன்னாள் ராணுவ வீரர் வீட்டில் 3½ பவுன் நகை திருட்டு

முன்னாள் ராணுவ வீரர் வீட்டில் 3½ பவுன் தங்க நகையை திருடிய மர்ம ஆசாமிகளை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.
திருவெறும்பூர் அருகே உள்ள நவல்பட்டு அண்ணா நகரை சேர்ந்தவர் செந்தில்குமார் (வயது 53). முன்னாள் ராணுவ வீரரான இவர் இந்தியன் ஓவர்சீஸ் வங்கியில் காவலாளியாக பணியாற்றி வருகிறார். இவரது மனைவி லதா. இவர்களுக்கு 2 மகள்கள் உள்ளனர். இந்த நிலையில் செந்தில்குமார் கடந்த 24-ந்தேதி குடும்பத்துடன் சென்னையில் உள்ள உறவினர் வீட்டு திருமணத்துக்கு சென்றுவிட்டார். இதைத்தொடர்ந்து 25-ந்தேதி மீண்டும் வீட்டுக்கு வந்தபோது, வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டு கதவு திறந்து கிடந்தது. இதனால் அதிர்ச்சி அடைந்த அவர் வீட்டுக்குள் சென்று பார்த்தபோது, பீரோவில் இருந்த 3½ பவுன் தங்க நகைகள் திருடப்பட்டு இருந்தது. வீட்டில் ஆட்கள் இல்லாததை நோட்டமிட்டு மர்ம ஆசாமிகள் இந்த துணிகர திருட்டில் ஈடுபட்டுள்ளனர். இது குறித்த புகாரின் பேரில் நவல்பட்டு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.