பலத்த காற்று வீசியதால் 3 மின்கம்பங்கள் சாய்ந்து விழுந்தன

உத்தமசோழபுரம் ஊராட்சியில் பலத்த காற்று வீசியதால் 3 மின்கம்பங்கள் சாய்ந்து விழுந்தன/
நாகப்பட்டினம்
திட்டச்சேரி:
நாகை மாவட்டம் திருமருகல் ஒன்றியம் உத்தமசோழபுரம் ஊராட்சியில் மாண்டஸ் புயல் காரணமாக பலத்த காற்று வீசியது. இதனால் நாகூர் -கங்களாஞ்சேரி சாலையோரத்தில் இருந்த 3 மின்கம்பங்கள் சாய்ந்தது.
இது குறித்து தகவல் அறிந்த ஊராட்சி மன்ற தலைவர் ஜனனி பாலாஜி உடன் சம்பவ இடத்திற்கு வந்து மின்வாரியத் துறை அதிகாரிகளுக்கு தகவல் கொடுத்தார். தகவல் அறிந்த மின்வாரிய ஊழியர்கள் சம்பவ இடத்துக்கு வந்து 3 மின்கம்பங்களையும் பொக்லின் எந்திரத்தின் உதவியுடன் சீரமைத்தனர். மின்கம்பங்கள் சாய்ந்ததால் உத்தமசோழபுரம் ஊராட்சி பகுதியில் 2 மணி நேரத்திற்கும் மேல் மின்தடை ஏற்பட்டது.
Related Tags :
Next Story