30 மூடை ரேஷன் அரிசி வேனுடன் பறிமுதல்

ராஜபாளையத்தில் 30 மூடை ரேஷன் அரிசியை வேனுடன் பறிமுதல் செய்த போலீசார் 3 பேரை கைது செய்தனர்.
ராஜபாளையத்தில் 30 மூடை ரேஷன் அரிசியை வேனுடன் பறிமுதல் செய்த போலீசார் 3 பேரை கைது செய்தனர்.
ரேஷன் அரிசி பறிமுதல்
விருதுநகர் மாவட்ட உணவு பொருள் கடத்தல் தடுப்பு பிரிவு போலீசாருக்கு கிடைத்த ரகசிய தகவலின் பேரில் ராஜபாளையம் புதிய பஸ் நிலையம் அருகே வாகன சோதனையில் ஈடுபட்டனர்.
அப்போது அந்த வழியாக வந்த ஒரு வேனை நிறுத்தி சோதனை செய்தனர். அந்த வேனில் தலா 60 கிலோ கொண்ட 30 மூடைகளில் 1.8 டன் ரேஷன் அரிசி இருந்தது.
3 பேர் கைது
இதையடுத்து வேனுடன் ரேஷன் அரிசியை போலீசார் பறிமுதல் செய்தனர்.
இதுதொடர்பாக வேன் உரிமையாளர் மற்றும் டிரைவர் எஸ். ராமலிங்காபுரத்தை சேர்ந்த அருண்குமார் (வயது 27), சாத்தூர் மேட்டமலையை சேர்ந்த சுமை தூக்கும் தொழிலாளி அருணாச்சலம் (25), ஸ்ரீவில்லிபுத்தூர் மங்காவத்தை சேர்ந்த அரிசி உரிமையாளர் மகாலிங்கம் (34) ஆகிய 3 பேரையும் கைது செய்து வழக்குப்பதிவு செய்தனர்.