காலியாக உள்ள 31 ஆசிரியர்கள் பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம்


ஆதிதிராவிடர் நலத்துைற பள்ளிகளில் காலியாக உள்ள 31 ஆசிரியர் பணயிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம் எனவும் இதற்கு நாளை கடைசி எனவும் அறிவிக்கப்பட்டு்ள்ளது.

திருவண்ணாமலை

திருவண்ணாமலை

ஆதிதிராவிடர் நலத்துைற பள்ளிகளில் காலியாக உள்ள 31 ஆசிரியர் பணயிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம் எனவும் இதற்கு நாளை கடைசி எனவும் அறிவிக்கப்பட்டு்ள்ளது.

காலி பணியிடம்

திருவண்ணாமலை மாவட்டத்தில் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறையின் கட்டுப்பாட்டில் இயங்கி வரும் ஆதிதிராவிடர் தொடக்கப்பள்ளி, நடுநிலைப்பள்ளி மற்றும் மேல்நிலைப்பள்ளிகளில் 26 இடைநிலை ஆசிரியர், 5 பட்டதாரி ஆசிரியர் உள்பட மொத்தம் 31 பணியிடங்கள் காலியாக உள்ளன. அது குறித்த அறிவிப்புக்ள் மாவட்ட ஆதிதிராவிடர் நல அலுவலகம், செங்கம், போளூர், வந்தவாசி ஆகிய இடங்களில் உள்ள ஆதிதிராவிடர் நல தனி தாசில்தார் அலுவலக தகவல் பலகையில் வெளியிடப்பட்டு உள்ளது.

இந்த பணியிடங்கள் தொகுப்பு ஊதியத்தில் தற்காலிகமாக நிபந்தனையின் அடிப்படையில் நிரப்பப்பட உள்ளது. இடைநிலை ஆசிரியருக்கு ரூ.7 ஆயிரம் 500-ம், பட்டதாரி ஆசிரியருக்கு ரூ.10 ஆயிரமும், முதுகலை பட்டதாரி ஆசிரியர்களுக்கு ரூ.12 ஆயிரமும் ஊதியமாக வழங்கப்படும்.

ஆசிரியர் பணிக்கான உரிய கல்வித் தகுதிகளுடன் ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்று இல்லம் தேடி கல்வித் திட்டத்தில் தன்னார்வலராக பணியாற்றுவோருக்கு முன்னுரிமை அளிக்கப்படும். இடைநிலை ஆசிரியர், பட்டதாரி ஆசிரியர் காலி பணியிடங்கள் சம்பந்தப்பட்ட பள்ளி மேலாண்மைக்குழுவின் மூலம் நிரப்பப்படும்

விண்ணப்பிக்கலாம்

பணி நியமனம் செய்யப்படும் ஆசிரியர்கள் வருகிற ஏப்ரல் மாதம் வரையில் பணி வழங்கப்படும். எனவே தகுதியுள்ள நபர்கள் நாளை (சனிக்கிழமை) மாலை 5.45 மணிக்குள் மாவட்ட கலெக்டர் அலுவலக வளாகத்தில் உள்ள மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல அலுவலகத்தில் விண்ணப்பினை உரி கல்வி தகுதி சான்று ஆவணங்களுடன் அளிக்கலாம் என கலெக்டர் முருகேஷ் தெரிவித்து உள்ளார்.


Next Story