32 மூட்டை ரேஷன் அரிசி பறிமுதல்


32 மூட்டை ரேஷன் அரிசி பறிமுதல்
x

கோவில் வளாகத்தில் பதுக்கி வைத்திருந்த 32 மூட்டை ரேஷன் அரிசி பறிமுதல் செய்யப்பட்டது.

அரியலூர்

அரியலூர் மாவட்டம் திருமானூர் ஒன்றியத்திற்குட்பட்ட மலத்தான்குளம் கிராமத்தில் மதுரை வீரன் மற்றும் கருப்பண்ண சாமி கோவில் உள்ளது. இந்த கோவில் வளாகத்தின் பின்புறம் 32 அரிசி மூட்டைகள் அடுக்கி வைக்கப்பட்டிருப்பதாக அப்பகுதி மக்கள் குடிமைப்பொருள் பதுக்கல் துறை உதவி ஆய்வாளர் மணிகண்டன் மற்றும் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். இதையடுத்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் அந்த மூட்டைகளை பிரித்து பார்த்தபோது அது ரேஷன் அரிசி என்பது தெரியவந்தது. இதையடுத்து 32 மூட்டை ரேஷன் அரிசிகளை போலீசார் பறிமுதல் செய்தனர். மேலும் இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து இங்கு ரேஷன் அரிசி மூட்டைகளை வைத்தது யார்? என்பது குறித்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.


Next Story