330 லிட்டர் சாராயம் பறிமுதல்


330 லிட்டர் சாராயம் பறிமுதல்
x

330 லிட்டர் சாராயம் பறிமுதல்

நாகப்பட்டினம்

நாகூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் சிவராமன் மற்றும் போலீசார் நேற்றுமுன்தினம் இரவு சோதனை சாவடி அருகில் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது காரைக்காலில் இருந்து நாகைக்கு 3 மோட்டார்சைக்கிள்களில் வந்தனர். போலீசாரை பார்த்ததும் மோட்டார்சைக்கிள்களை அங்கேயே நிறுத்திவிட்டு அவர்கள் தப்பி ஓடிவிட்டனர். மோட்டார்சைக்கிள்களை சோதனை மேற்கொண்ட போது, அதில் சாராயம் கடத்தி வந்தது தெரியவந்தது. இதுகுறித்து நாகூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து கடத்தி வந்த 330 லிட்டர் சாராயத்தையும், கடத்தலுக்கு பயன்படுத்திய 3 மோட்டார் சைக்கிள்களையும் பறிமுதல் செய்து, தப்பி ஓடிய 3 பேரை வலைவீசி தேடி வருகின்றனர்.


Next Story