பணம் வைத்து சூதாடிய 40 பேர் கைது


பணம் வைத்து சூதாடிய 40 பேர் கைது
x

கடலூர் மாவட்டம் முழுவதும் பணம் வைத்து சூதாடிய 40 பேரை போலீசார் கைது செய்தனர்.

கடலூர்

கடலூர் மாவட்டத்தில் பணம் வைத்து சூதாட்டத்தில் ஈடுபடுபவர்கள் மீது நடவடிக்கை எடுக்கும்படி போலீசாருக்கு, மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சக்தி கணேசன் உத்தரவிட்டார். அதன் பேரில் மாவட்டத்தில் உள்ள 7 உட்கோட்டங்களுக்குட்பட்ட போலீஸ் நிலையங்களை சேர்ந்த போலீசார் நேற்று தீவிர ரோந்து பணி மேற்கொண்டனர். இதில் பணம் வைத்து சூதாடிய கடலூர் செம்மண்டலம் கணேசன் (வயது 65), அருள்தாஸ் (40), பச்சாங்குப்பம் முருகாநந்தம் (57), முத்துகிருஷ்ணன் (42), நெய்வேலி டவுன்ஷிப் செடுத்தான்குப்பம் குருசாமி (47) உள்பட விருத்தாசலம், சிதம்பரம், வேப்பூர், அங்குசெட்டிப்பாளையம், பண்ருட்டி, புதுப்பேட்டை, ஸ்ரீமுஷ்ணம், காட்டுமன்னார்கோவில் என மாவட்டம் முழுவதும் பணம் வைத்து சூதாடியதாக 40 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.


Next Story