மழை வெள்ளத்தில் 500 ஏக்கர் நெற்பயிர்கள் மூழ்கின


மழை வெள்ளத்தில் 500 ஏக்கர் நெற்பயிர்கள் மூழ்கின
x

துரிஞ்சாபுரம் ஒன்றியத்தில் மழை வெள்ளத்தில் 500 ஏக்கர் நெற்பயிர்கள் மூழ்கின.

திருவண்ணாமலை

திருவண்ணாமலை மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக பரவலாக மழை பெய்து வருகின்றது. தொடர்ந்து செங்கம் அருகே உள்ள குப்பநத்தம் அணையில் இருந்து தண்ணீர் திறக்கப்பட்டதால் செய்யாற்றின் வழியாக மஷார், கல்லரபாடி, பெரியகிளம்பாடி ஆகிய ஏரிகளுக்கு தண்ணீர் வரத்து அதிகரித்து ஏரிகள் நிரம்பி, உபரிநீர் வெளியேறி வருகின்றன.

இதனால் துரிஞ்சாபுரம் ஒன்றியத்துக்கு உட்பட்ட ஊதிரம்பூண்டி கால்வாயில் தண்ணீர் அதிகரித்து பாலத்தின் மீது வெள்ளம் செல்கின்றன. சாலைகள் மூழ்கடித்து செல்வதால் திருவண்ணாமலையில் இருந்து தேவனாம்பட்டு வழியாக பெரியகிளாம்பாடி செல்லும் பஸ் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. இதனால் இரண்டு கிராமங்களுக்கு போக்குவரத்து துண்டிக்கப்பட்டுள்ளது.

மேலும் தேவனாம்பட்டில் இருந்து சிறுகிளாம்பாடி செல்லும் சாலையில் உள்ள பாலமும் வெள்ளத்தால் மூழ்கடித்து, கால்வாய் உடைந்து தண்ணீர் முழுவதும் விவசாய நிலங்களில் செல்கின்றன. இதனால் தேவனாம்பட்டு, ஊதிரம்பூண்டி, பெரிய கிளாம்பாடி, நார்த்தாம்பூண்டி, நாயுடுமங்கலம் உள்ளிட்ட கிராமங்களில் உள்ள விவசாய நிலங்களில் தண்ணீர் புகுந்து 500 ஏக்கர் நெற்பயிர்கள் தண்ணீரில் மூழ்கின. இதனால் அப்பகுதி விவசாயிகள் வேதனை அடைந்துள்ளனர்.


Next Story