மோட்டார் சைக்கிள் மோதி 6 வயது சிறுவன் பலி


மோட்டார் சைக்கிள் மோதி 6 வயது சிறுவன் பலி
x

மணவாளக்குறிச்சி அருகே மோட்டார் சைக்கிள் மோதியதில் 6 வயது சிறுவன் பரிதாபமாக பலியானான்.

கன்னியாகுமரி

மணவாளக்குறிச்சி:

மணவாளக்குறிச்சி அருகே மோட்டார் சைக்கிள் மோதியதில் 6 வயது சிறுவன் பரிதாபமாக பலியானான்.

சிறுவன்

மணவாளக்குறிச்சி அருகே உள்ள அம்மாண்டிவிளை பொட்டல்குழியை சேர்ந்தவர் சகாய வால்டர் (வயது43). இவர் மணவாளக்குறிச்சியில் உள்ள ஒரு ஸ்டுடியோவில் போட்டோ கிராபராக வேலை பார்த்து வருகிறார்.

இவருக்கு பத்மினி என்ற மனைவியும், டஸ்கின் ஜோந்த்(6) மற்றும் 1 வயதில் ஒரு மகனும் உள்ளனர். டஸ்கின் ஜோந்த் அந்த பகுதியில் உள்ள ஒரு பள்ளியில் 1-ம் வகுப்பு படித்து வந்தான்.

மோட்டார் சைக்கிள் மோதியது

சம்பவத்தன்று மாலையில் பள்ளி முடிந்து டஸ்கின் ஜோ ந்த் வீட்டுக்கு வந்தான்.பின் னர், வீட்டு முன் நின்று கொண்டிருந்தான். அப்போது, திடீரென வீட்டு முன் உள்ள சாலையை கடக்க முயன்றபோது, அம்மாண்டிவிளையில் இருந்து திருநயினார் குறிச்சி நோக்கி சென்ற மோட்டார் சைக்கிள் எதிர்பாராத விதமாக டஸ்கின் ஜோந்த் மீது மோதியது.

இதில், தூக்கி வீசப்பட்டு படுகாயமடைந்த சிறுவனை குடும்பத்தினர் மீட்டு சிகிச்சைக்காக நாகர்கோவிலில் உள்ள ஒரு தனியார் ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு சிறுவனுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது.

பலி

இந்தநிலையில் அங்கு சிகிச்சை அளித்தும் பலனின்றி நேற்றிரவு டஸ்கின் ஜோந்த் பரிதாபமாக இறந்தான்.

இதுகுறித்து சிறுவனின் தந்தையான சகாய வால்டர் மணவாளக்குறிச்சி போலீசில் புகார் செய்தார். அதன்பேரில், போலீசார் விபத்தை ஏற்படுத்திய மோட்டார் சைக்கிளை ஓட்டி வந்த சின்னவிளையை சேர்ந்த பென்கர் கிரோஷியோ என்பவர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

ேமாட்டார் சைக்கிள் மோதி 6 வயது சிறுவன் பலியான சம்பவம் அந்த பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.


Next Story