தர்மபுரி நகரில் போலீஸ் ரோந்து பணிக்கு 7 புதிய மோட்டார் சைக்கிள்கள்-டி.ஐ.ஜி. பிரவீன் குமார் அபினபு பார்வையிட்டார்


தர்மபுரி நகரில் போலீஸ் ரோந்து பணிக்கு 7 புதிய மோட்டார் சைக்கிள்கள்-டி.ஐ.ஜி. பிரவீன் குமார் அபினபு பார்வையிட்டார்
x

தர்மபுரி நகரில் போலீஸ் ரோந்து பணிக்கு புதிதாக வாங்கப்பட்ட 7 புதிய மோட்டார் சைக்கிள்களை டி.ஐ.ஜி. பிரவீன்குமார் அபினபு பார்வையிட்டார்.

தர்மபுரி

போலீஸ் ரோந்து

தர்மபுரி நகரில் போக்குவரத்து நெரிசலை கட்டுப்படுத்தவும், குற்ற சம்பவங்களை கண்காணிக்கவும், ஊர்வலம் மற்றும் பொதுக்கூட்டங்கள் நடைபெறுவதை கண்காணிக்கவும் மோட்டார் சைக்கிளில் போலீசார் ரோந்து பணி மேற்கொள்ள உள்ளனர். இதற்காக போலீசாருக்கு 7 மோட்டார் சைக்கிள்கள் வழங்கப்பட்டுள்ளன.

இந்த நிலையில் புதிதாக வாங்கப்பட்ட 7 மோட்டார் சைக்கிள்களில் போலீசார் ரோந்துப்பணி தொடக்க நிகழ்ச்சி தர்மபுரி ஆயுதப்படை மைதானத்தில் நேற்று மாலை நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு கலைச்செல்வன் தலைமை தாங்கினார்.

இந்த நிகழ்ச்சியில் ரோந்து பணியை சேலம் சரக டி.ஐ.ஜி. பிரவீன் குமார் அபினபு தொடங்கி வைத்து போலீசாருக்கு வழங்கப்பட்டுள்ள மோட்டார் சைக்கிள்களை பார்வையிட்டார். பின்னர் அவர் ேபாலீஸ் புகைப்பட பிரிவு, கைவிரல் ரேகை பிரிவு, தடய அறிவியல் பிரிவு, மாவட்ட குற்றப்பிரிவு, ஆயுதப்படை மற்றும் காவலருக்கு வழங்கப்பட்டுள்ள உடைமைகள் மற்றும் வாகனங்கள் சரியான முறையில் பராமரிக்கப்படுகிறதா என்பதை ஆய்வு செய்தார்.

தலைக்கவசம் கட்டாயம்

இந்த நிகழ்ச்சியில் சேலம் சரக டி.ஐ.ஜி. பிரவீன்குமார் அபினபு பேசும் போது, 'மோட்டார் சைக்கிள்களில் ரோந்துப்பணி மேற்கொள்ளும் போலீசார், ஆங்காங்கே நடைபெறும் குற்ற சம்பவங்கள் நடைபெறாமல் தடுக்க தங்களது ரோந்து பணியை தீவிரப்படுத்த வேண்டும். போலீஸ்காரர்கள் அனைவரும் மோட்டார் சைக்கிள் ஓட்டும் பொழுது தலைக்கவசம் (ஹெல்மெட்) கட்டாயம் அணிய வேண்டும். நான்கு சக்கர வாகன ஓட்டுபவர்கள் கட்டாயம் சீட் பெல்ட் அணிய வேண்டும்' என்றார்.

இந்த நிகழ்ச்சியில் கூடுதல் போலீஸ் சூப்பிரண்டுகள் அண்ணாமலை, இளங்கோவன் மற்றும் துணை போலீஸ் சூப்பிரண்டுகள், இன்ஸ்பெக்டர்கள் கலந்து கொண்டனர்.


Next Story