குப்பைகளை சேகரிக்க 7 புதிய வாகனங்கள்


குப்பைகளை சேகரிக்க 7 புதிய வாகனங்கள்
x
தினத்தந்தி 5 Aug 2023 1:15 AM IST (Updated: 5 Aug 2023 1:15 AM IST)
t-max-icont-min-icon

கொடைக்கானல் நகராட்சியில் குப்பைகளை சேகரிக்க 7 புதிய வாகனங்கள் வாங்கப்பட்டுள்ளன.

திண்டுக்கல்

கொடைக்கானல் நகராட்சியில் உள்ள பல்வேறு தெருக்களில் குப்பைகளை சேகரிப்பதற்கு பெரிய லாரிகள் செல்ல இயலாததால் சிறிய ரக வாகனங்கள் வாங்க இ.பெ.செந்தில்குமார் எம்.எல்.ஏ. முயற்சியின்பேரில் நடவடிக்கை எடுக்கப்பட்டது. இதன்படி 15-வது மத்திய நிதி குழு நிதியின் மூலம் ரூ.60 லட்சத்தில் புதிதாக 7 வாகனங்கள் வாங்கப்பட்டன. இந்த வாகனங்களின் மூலம் குப்பைகள் சேகரிக்கும் பணியை நகராட்சி தலைவர் செல்லத்துைர, துணைத் தலைவர் மாயக்கண்ணன், ஆணையர் சத்தியநாதன் ஆகியோர் தொடங்கி வைத்தனர். நிகழ்ச்சியில் நகராட்சி பொறியாளர் முத்துக்குமார், நகர் நல அலுவலர் தினேஷ்குமார், சுகாதார ஆய்வாளர்கள் ராஜாமணி, அலெக்ஸ், மாரிமுத்து உள்பட பலர் கலந்து கொண்டனர்.


Next Story