900 லிட்டர் மண்எண்ணெய் பறிமுதல்

கேரளாவுக்கு கடத்த முயன்ற 900 லிட்டர் மண்எண்ணெய் பறிமுதல்
கன்னியாகுமரி
கொல்லங்கோடு,
நித்திரவிளை தனிப்படை ஏட்டு ஜோஸ் மற்றும் போலீசார் நித்திரவிளை அருகே காஞ்சாம்புறம் பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது, அந்த வழியாக மீன் பெட்டிகளை ஏற்றிய நிலையில் ஒரு மினி டெம்போ வந்தது. போலீசார் அதை நிறுத்தி சோதனை செய்த போது காலியாக இருந்த மீன் பெட்டிகளுக்கு அடியில் தார்ப்பாயால் மூடப்பட்ட நிலையில் பிளாஸ்டிக் கேன்களில் 900 லிட்டர் மானிய விலை மண்எண்ணெய் இருந்தது. விசாரணையில் இந்த மண்எண்ணெய் கேரளாவுக்கு கடத்தி செல்ல முயன்றது தெரிய வந்தது. இதனையடுத்து போலீசார் மினி டெம்போவுடன் மண்எண்ணெய்யை பறிமுதல் செய்து போலீஸ் நிலையம் கொண்டு சென்றனர். மேலும், ெடம்போ டிைரவரை பிடித்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
----------
Related Tags :
Next Story