பிளஸ்-2 பொதுத்தேர்வில் 90.36 சதவீதம் மாணவ-மாணவிகள் தேர்ச்சி

மயிலாடுதுறை மாவட்டத்தில் பிளஸ்-2 பொதுத்தேர்வில் 90.36 சதவீதம் மாணவ-மாணவிகள் தேர்ச்சி பெற்றுள்ளனர்.
மயிலாடுதுறை
தமிழகத்தில் கடந்த மே மாதம் பிளஸ்-2 பொதுத்தேர்வு நடந்தது. இதையடுத்து விடைத்தாள் மதிப்பீட்டு பணிகள் நிறைவுபெற்று நேற்று தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டன. மயிலாடுதுறை மாவட்டத்தில் 4 ஆயிரத்து 593 மாணவர்களும், 5 ஆயிரத்து 381 மாணவிகளும் என மொத்தம் 9 ஆயிரத்து 974 பேர் தேர்வு எழுதியிருந்தனர்.
90.36 சதவீதம் தேர்ச்சி
அவர்களில் மாணவர்கள் 3 ஆயிரத்து 978 பேரும், மாணவிகள் 5 ஆயிரத்து 35 பேரும் என 9 ஆயிரத்து 13 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். இது, 90.36 சதவீதம் ஆகும். இதில், மாணவர்கள் 86.61 சதவீதமும், மாணவிகள் 93.57 சதவீதமும் ஆகும். வழக்கம்போல மாணவர்களை விட மாணவிகள் அதிகளவு தேர்ச்சி பெற்றுள்ளனர்.
Related Tags :
Next Story