மாவட்டத்தில் 2 ஆண்டுகளில் 95 ஆயிரம் பேர் நாய்க்கடியால் பாதிப்பு - 3 பேர் உயிரிழப்பு


மாவட்டத்தில் 2 ஆண்டுகளில் 95 ஆயிரம் பேர் நாய்க்கடியால் பாதிப்பு  - 3 பேர் உயிரிழப்பு
x

மதுரை மாவட்டத்தில் 2 ஆண்டுகளில் 95 ஆயிரம் பேர் நாய்க்கடியால் பாதிக்கப்பட்டுள்ளதாக தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மதுரை


மதுரை மாவட்டத்தில் 2 ஆண்டுகளில் 95 ஆயிரம் பேர் நாய்க்கடியால் பாதிக்கப்பட்டுள்ளதாக தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தெருநாய்கள் தொல்லை

மதுரையில் தெருநாய்களின் தொல்லை நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே செல்கிறது. குறிப்பாக இரவு நேரங்களில் நாய்களின் தொல்லை அதிகமாக இருக்கிறது. வாகனங்களில் செல்லும் நபர்களை நாய்கள் கடிப்பதால் அதிகமாக விபத்துகள் நடந்த வண்ணம் உள்ளது. இது ஒருபுறம் இருக்க மாநகராட்சி நிர்வாகத்தினர் நாய்களை பிடித்து, கருத்தடை செய்தாலும் அதன் எண்ணிக்கை அதிகமாகவே இருக்கிறது. இந்தநிலையில், மதுரையை சேர்ந்த சமூக ஆர்வலர் ஒருவர், மதுரை மாவட்டத்தில் கடந்த 2021, 2022 ஆகிய ஆண்டுகளில் நாய் கடிக்கு சிகிச்சை பெற்றவர்களின் எண்ணிக்கை குறித்து தகவல் அறியும் உரிமை சட்டத்தில் கேள்வி கேட்டிருந்தார்.

3 பேர் உயிரிழப்பு

அதற்கு மாவட்ட சுகாதாரத்துறை சார்பில் தகவல் தெரிவிக்கப்பட்டது. அதில், கடந்த 2021-ம் ஆண்டு சுமார் 48 ஆயிரத்து 323 பேரும், 2022-ம் ஆண்டு 46 ஆயிரத்து 962 பேரும் என கடந்த 2 ஆண்டுகளில் மொத்தம் 95 ஆயிரத்து 285 பேரை தெருநாய்கடியால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

அதேபோன்று கடந்த 2021 ஆண்டு ஒருவரும், 2022 ஆம் ஆண்டு 2 பேர் என மொத்தம் 3 பேர் உயிரிழந்துள்ளனர். மதுரை மாநகராட்சி பகுதியில் மாதத்திற்கு, 200 நாய்களை பிடித்து கருத்தடை செய்யப்பட்டு தடுப்பூசிகள் போடப்பட்டு வருகிறது. நாய் கடியால் பாதிக்கப்படும் பொது மக்களுக்கு அரசு ஆஸ்பத்திரியில் 24 மணி நேரமும் உயர்தர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. உடனடியாக தடுப்பூசியும் போடப்படுகிறது என அதில் கூறப்பட்டுள்ளது.


Next Story