பள்ளி மாணவர்களுக்கு பாலியல் தொல்லை கொடுத்த கட்டிட மேஸ்திரி


பள்ளி மாணவர்களுக்கு பாலியல் தொல்லை கொடுத்த கட்டிட மேஸ்திரி
x

காவேரிப்பாக்கத்தில் பள்ளி மாணவர்களுக்கு பாலியல் தொல்லை கொடுத்த கட்டிட மேஸ்திரி போக்சோவில் கைது செய்யப்பட்டார்.

ராணிப்பேட்டை

ராணிப்பேட்டை மாவட்டம் காவேரிப்பாக்கம் செல்வவிநாயகர் கோவில் தெருவை சேர்ந்தவர் நரேஷ்குமார் (வயது 23), கட்டிட மேஸ்திரி. இவர் கடந்த மாதம் 24 மற்றும் 25 ஆகிய தேதிகளில் அதேப் பகுதியைச் சேர்ந்த 7-ம் வகுப்பு படிக்கும் 2 மாணவர்களுக்கு பாலியல் தொல்லை கொடுத்து வந்துள்ளார். இதனால் மாணவர்கள் 2 பேரும் உடல் சோர்வடைந்து காணப்பட்டுள்ளனர்.

இதுகுறித்து பெற்றோர்கள் 2 பேரிடமும் கேட்டபோது நரேஷ்குமார் தங்களை அப்பகுதியில் உள்ள வாழை தோட்டத்திற்கு அழைத்து சென்று பாலியல் தொல்லை கொடுத்ததாக தெரிவித்துள்ளனர்.

இதனால் அதிர்ச்சி அடைந்த அவர்கள் இதுகுறித்து காவேரிப்பாக்கம் போலீசில் புகார் கொடுத்துள்ளனர். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து நரேஷ்குமாரை போக்சோ சட்டத்தில் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story