சிறுமியை திருமணம் செய்து கர்ப்பிணியாக்கிய வாலிபர் மீது வழக்கு

சிதம்பரத்தில் சிறுமியை திருமணம் செய்து கர்ப்பிணியாக்கிய வாலிபர் மீது வழக்கு
கடலூர்
சிதம்பரம்
சிதம்பரம் அருகே உள்ள கிராமத்தை சேர்ந்தவர் கோவிந்தசாமி மகன் கவியரசன் (வயது 24). சம்பவத்தன்று இவர் அதே பகுதியை சேர்ந்த 16 வயது சிறுமியை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இதையடுத்து கவியரசன் சிறுமியிடம் உல்லாசம் அனுபவித்ததாக தொிகிறது. இதில் அந்த சிறுமி தற்போது 9 மாத கர்ப்பணியாக உள்ளார். இந்த நிலையில் சிறுமி சிதம்பரம் அரசு ஆஸ்பத்திரியில் பிரசவத்துக்காக அனுமதிக்கப்பட்டார். அப்போது சிறுமி 18 வயது பூர்த்தி அடையாததை அறிந்த டாக்டர்கள் இதுகுறித்து சிதம்பரம் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தனர். அதன்பேரில் போலீசார் கவியரசன் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Related Tags :
Next Story