செறிவூட்டப்பட்ட அரிசி திட்டத்திற்கு தடை கோரிய வழக்கு - மத்திய, மாநில அரசுகள் பதிலளிக்க ஐகோர்ட்டு உத்தரவு


செறிவூட்டப்பட்ட அரிசி திட்டத்திற்கு தடை கோரிய வழக்கு - மத்திய, மாநில அரசுகள் பதிலளிக்க ஐகோர்ட்டு உத்தரவு
x

மத்திய, மாநில அரசுகள் பதிலளிக்க உத்தரவிட்டு வழக்கை 8 வாரங்களுக்கு ஒத்திவைத்தது .

சென்னை,

தமிழ் தேசிய பேரியக்கத்தில் உள்ள மகளிர் ஆணயத்தின் செயலாளர் கனிமொழி மணிமாறன் சென்னை ஐகோர்ட்டில் பொதுநல மனு ஒன்றை தாக்கல் செய்தார்.

அந்த மனுவில் ,

தலசீமியா, ரத்த சோகை உள்ளவர்கள் இரும்புசத்து கொண்ட செறிவூட்டப்பட்ட உணவுகளை சாப்பிடக்கூடாது. எந்த ஒரு முறையான ஆய்வுகளையும் மேற்கொள்ளாமல், மக்களுக்கு வழங்க மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.

மக்களின் ஏழ்மையை பயன்படுத்திக் கொண்டு, நாட்டில் மிகப்பெரிய உடல் நலபாதிப்பு ஏற்படுத்தும் வகையிலான கார்ப்பேரேட் நிறுவனங்களின் மறைமுகத்திட்டமாக உள்ளது என கூறப்பட்டுள்ளது.

இந்த மனுவை பரிசீலித்த சென்னை ஐகோர்ட்டு மத்திய, மாநில அரசுகள் பதிலளிக்க உத்தரவிட்டு வழக்கை 8 வாரங்களுக்கு ஒத்திவைத்தது .


Next Story