சிங்கவரம் மலை மீது அமைந்துள்ளரங்கநாதர் கோவிலை சுற்றி டிரோன் பறந்ததால் பரபரப்புபோலீசார் விசாரணை

சிங்கவரம் மலை மீது அமைந்துள்ள ரங்கநாதர் கோவிலை சுற்றி டிரோன் பறந்ததால் பரபரப்பு ஏற்பட்டது
செஞ்சி,
விழுப்புரம் மாவட்டம் செஞ்சியில் இருந்து 4 கிலோ மீட்டர் தொலைவில் சிங்கவரம் கிராமத்தில் மலை மீது ரங்கநாதர் கோவில் அமைந்துள்ளது. இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு 7.25 மணியளவில் கோவில் உள்ள மலை மீது டிரோன் ஒன்று பறந்தது. அந்த டிரோன் சுமார் 10 நிமிடங்கள் கோவிலை சுற்றி நாலாபுறமும் பறந்தபடி படம் பிடித்ததுடன், திடீரென மறைந்து விட்டதாக கூறப்படுகிறது. இதைபார்க்க அக்கிராம மக்கள் திரண்டதால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது. மேலும் இதுகுறித்து கோவில் நிர்வாகம் தரப்பில் செஞ்சி போலீசில் புகார் கொடுக்கப்பட்டது.
அதன்பேரில் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து கிராம மக்களிடம் விசாரணை நடத்தியதுடன், டிரோன் கேமராவால் புகைப்படம், வீடியோ எடுத்த நபர்கள் யார்? எதற்காக டிரோன் மூலம் படம் பிடித்தார்கள் என விசாரணை நடத்தி வருகிறார்கள்.
இதேபோல் சிங்கவரத்தை அடுத்த மேளச்சேரி காப்புக்காட்டில் உள்ள பச்சையம்மன் கோவிலை சுற்றியும் டிரோன் பறந்ததாக கூறப்படுகிறது.