தோட்டத்தில் ரத்தக்காயத்துடன் பிணமாக கிடந்த விவசாயி


தோட்டத்தில் ரத்தக்காயத்துடன் பிணமாக கிடந்த விவசாயி
x

தோகைமலை அருகே தோட்டத்தில் ரத்தக்காயத்துடன் பிணமாக கிடந்த விவசாயி கொலை செய்யப்பட்டாரா? என போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

கரூர்

விவசாயி

கரூர் மாவட்டம், தோகைமலை அருகே உள்ள திருமாணிக்கம்பட்டி கிராமத்தை சேர்ந்தவா் ராஜலிங்கம் (வயது 58). விவசாயி. இவர் நேற்று காலை தனது தோட்டத்திற்கு சென்று வருவதாக வீட்டில் இருந்தவர்களிடம் கூறி விட்டு வெளியே சென்றார்.

ஆனால் வெகுநேரம் ஆகியும் வீட்டிற்கு வரவில்லையாம். இதையடுத்து ராஜலிங்கத்தின் மகன் ரத்தினவேல் மற்றும் உறவினர்கள் அவரை பல்வேறு இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை.

பிணமாக கிடந்தார்

இதையடுத்து தோட்டத்திற்கு சென்று பார்த்தபோது, ராஜலிங்கம் கிணற்றின் அருகே ரத்தக்காயத்துடன் பிணமாக கிடந்தார். இதுகுறித்து தகவல் அறிந்த தோகைமலை போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து ராஜலிங்கத்தின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக குளித்தலை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இதுகுறித்து தோகைமலை போலீசார் வழக்குப்பதிந்து ராஜலிங்கம் கொலை செய்யப்பட்டாரா? அல்லது அவர் தவறி விழுந்து இறந்தாரா? என்பன உள்பட பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story