மாணவ-மாணவிகளுக்கு விலையில்லா சைக்கிள் வழங்கும் விழா


மாணவ-மாணவிகளுக்கு விலையில்லா சைக்கிள் வழங்கும் விழா
x

வேதாரண்யத்தில் மாணவ-மாணவிகளுக்கு விலையில்லா சைக்கிள் வழங்கும் விழா நடந்தது.

நாகப்பட்டினம்

வேதாரண்யம்:

வேதாரண்யம் குருகுலம் பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் மாணவ-மாணவிகளுக்கு விலையில்லா சைக்கிள் வழங்கும் விழா நடந்தது. விழாவுக்கு நகர கூட்டுறவு வங்கி தலைவர் (பொறுப்பு) வக்கீல் அன்பரசு தலைமை தாங்கினார். குருகுல நிர்வாகி கயிலைமணி வேதரத்தினம் வரவேற்றார். பள்ளி தலைமையாசிரியை செல்வி முன்னிலை வகித்தார்.விழாவில் வேதாரண்யம் பகுதி பள்ளிகளைச் சேர்ந்த 3 ஆயிரத்து 898 மாணவ, மாணவிகளுக்கு விலையில்லா சைக்கிள்கள் வழங்கபட்டது. முடிவில் ஆசிரியை கார்குழலி நன்றி கூறினார்


Related Tags :
Next Story