போதிய வசதிகள் இல்லாத மருத்துவமனை


போதிய வசதிகள் இல்லாத மருத்துவமனை
x

போதிய வசதிகள் இல்லாத மருத்துவமனையில் தேவையானவசதிகளை செய்துகொடுக்க சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

திருப்பத்தூர்


ஆம்பூர் நகராட்சி மற்றும் தாலுகா, தொகுதி அந்தஸ்துகள் பெற்றுள்ளன. இங்குள்ள மருத்துவமனையில் எம்.ஆர்.ஐ.ஸ்கேன் வசதி இல்லை. பொதுமக்கள், நோயாளிகள் சிகிச்சைக்காக வந்தால், அவர்களை உடனே வேலூர் அடுக்கம்பாறைக்கு செல்ல பரிந்துரை செய்கிறார்கள். குறிப்பிட்ட பிரிவுகளுக்கு டாக்டர்கள் இல்லை. தினமும் ஏராளமான நோயாளிகள் வந்து ஏமாற்றத்துடன் திரும்பி செல்கிறார்கள். மருத்துவமனையில் சுகாதார வளாகம் சுத்தமாக இல்லை. சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து மருத்துவமனையில் போதிய வசதிகளை செய்து கொடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கைவிடுத்துள்ளனர்..


Next Story