4 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த லாரி டிரைவருக்கு ஆயுள் தண்டனை

4 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த லாரி டிரைவருக்கு ஆயுள் தண்டனை விதித்து திருவண்ணாமலை போக்சோ கோர்ட்டில் தீர்ப்பு வழங்கப்பட்டது.
4 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த லாரி டிரைவருக்கு ஆயுள் தண்டனை விதித்து திருவண்ணாமலை போக்சோ கோர்ட்டில் தீர்ப்பு வழங்கப்பட்டது.
லாரி டிரைவர்
கலசபாக்கம் தாலுகா வில்வாரணி அருகில் எலத்தூர் கிராமத்தை சேர்ந்தவர் விஜயன் என்பவரின் மகன் ரமேஷ் (வயது 37), லாரி டிரைவர். இவர் கடந்த 2014-ம் ஆண்டு ஆகஸ்டு மாதம் 4-ந் தேதி 4 வயது சிறுமியை கடத்தி சென்று பாலியல் பலாத்காரம் செய்ததாக கூறப்படுகிறது.
இதுகுறித்து பாதிக்கப்பட்ட சிறுமியின் பெற்றோர் போளூர் அனைத்து மகளிர் போலீசில் புகார் செய்தனர். அதன்போில் போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து ரமேசை கைது செய்தனர்.
இந்த சம்பவம் தொடர்பான வழக்கு விசாரணை திருவண்ணாமலை மாவட்ட ஒருங்கிணைந்த கோர்ட்டு வளாகத்தில் உள்ள போக்சோ வழக்குகளுக்கான சிறப்பு கோர்ட்டில் விசாரணை நடைபெற்று வந்தது.
இவ்வழக்கில் அரசு தரப்பில் வக்கீல் மைதிலி ஆஜரானார்.
ஆயுள் தண்டனை
இந்த நிலையில் இன்று இவ்வழக்கை விசாரித்த நீதிபதி பார்த்தசாரதி தீர்ப்பு கூறினார்.
அதில் குற்றம் சாட்டப்பட்ட லாரி டிரைவரான ரமேசுக்கு வாழ்நாள் முழுவதும் சிறை தண்டனை அனுபவிக்கும் வகையில் ஆயுள் தண்டனையும், ரூ.5 ஆயிரம் அபராதமும் விதித்து உத்தரவிட்டார்.
மேலும் இவ்வழக்கில் பாதிக்கப்பட்ட சிறுமிக்கு அரசு தரப்பில் ரூ.5 லட்சம் இழப்பீடு வழங்கவும் பரிந்துரை செய்தார்.
அதனைத்தொடர்ந்து ரமேசை போலீசார் வேலூர் மத்திய சிறையில் அடைத்தனர்.