ரூ.20 லட்சம் மதிப்பில் பல்நோக்கு கட்டிடம்


ரூ.20 லட்சம் மதிப்பில் பல்நோக்கு கட்டிடம்
x
தினத்தந்தி 9 Dec 2022 12:15 AM IST (Updated: 9 Dec 2022 12:17 AM IST)
t-max-icont-min-icon

அனைந்தநாடார்பட்டியில் ரூ.20 லட்சம் மதிப்பில் பல்நோக்கு கட்டிடத்துக்கு மனோஜ் பாண்டியன் எம்.எல்.ஏ. அடிக்கல் நாட்டினார்

தென்காசி

ஆலங்குளம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட பாப்பாக்குடி ஒன்றியம் இடைகால் பஞ்சாயத்து அனைத்தநாடார்பட்டி கிராமத்தில் ரூ.20 லட்சம் மதிப்பில் புதிய பல்நோக்கு கட்டிடம் சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து கட்ட அடிக்கல் நாட்டு விழா நடைபெற்றது.

பி.எச்.மனோஜ் பாண்டியன் எம்.எல்.ஏ. தலைமை தாங்கி அடிக்கல் நாட்டினார். தென்காசி வடக்கு மாவட்டச்செயலாளர் மூர்த்தி பாண்டியன், தெற்கு மாவட்டச்செயலாளர் வி.கே.கணபதி, பொதுக்குழு உறுப்பினர் ராதா, பஞ்சாயத்து தலைவர் பிரியதர்ஷினி உள்பட பலர் கலந்து கொண்டனர்.


Next Story