நன்னடத்தை பிணையை மீறியவருக்கு சிறை தண்டனை


நன்னடத்தை பிணையை மீறியவருக்கு சிறை தண்டனை
x

நெல்லையில் நன்னடத்தை பிணையை மீறியவருக்கு சிறை தண்டனை விதிக்கப்பட்டது.

திருநெல்வேலி

நெல்லை சந்திப்பு சி.என்.கிராமம் மேற்கு தெருவை சேர்ந்தவர் பெருமாள் மகன் சுடலைக்கண்ணு (வயது 27). இவரிடம் இருந்து போலீசார் ஒரு வருடத்திற்கான நன்னடத்தை பிணை பெற்றனர். ஆனால் அதன்பின்னரும் சுடலைக்கண்ணு குற்ற செயலில் ஈடுபட்டு வந்தாராம். மேலும் அவர் திருட்டு சம்பவத்தில் ஈடுபட்டு கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். இந்த நிலையில் அவர் நன்னடத்தை பிணையை மீறி செயல்பட்டதற்காக, நெல்லை சந்திப்பு குற்றப்பிரிவு போலீஸ் இன்ஸ்பெக்டர் சுப்புலட்சுமி நெல்லை மாநகர மேற்கு துணை கமிஷனர் சரவணகுமாரிடம் (நிர்வாக செயல்துறை நடுவர்) அறிக்கை சமர்ப்பித்தார். அதன் மீது விசாரணை நடத்திய துணை கமிஷனர் சரவணகுமார், பிணையை மீறி குற்றம் செய்ததால் சுடலைக்கண்ணுவை 10 மாதம் 13 நாட்கள் சிறையில் அடைக்க உத்தரவிட்டார்.


Next Story