திருமண விழாவுக்கு சென்றவர் மோட்டார்சைக்கிள் மோதி பலி


திருமண விழாவுக்கு சென்றவர் மோட்டார்சைக்கிள் மோதி பலி
x

திருமண விழாவுக்கு சென்றவர் மோட்டார்சைக்கிள் மோதி பலியானார்.

திருவண்ணாமலை

ஆரணி

திருமண விழாவுக்கு சென்றவர் மோட்டார்சைக்கிள் மோதி பலியானார்.

ஆரணி அருணகிரி சத்திரம் பகுதியைச் சேர்ந்தவர் விஜயகுமார் (வயது 55). நெசவு தொழிலாளியான இவர் ஆற்காடு சாலையில் வெள்ளேரியில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் உறவினர் திருமணத்தில் கலந்து கொள்வதற்காக நடந்து சென்று கொண்டிருந்தார்.

திருமண மண்டபத்தின் அருகே சென்றபோது எதிரே வந்த மோட்டார்சைக்கிள் அவர் மீது மோதியது. இதில் தலையில் பலத்த காயம் அடைந்த விஜயகுமார் அந்த இடத்திலேயே பலியானார்.

இது குறித்து ஆரணி தாலுகா விஜயகுமாரின் மனைவி விஜயா புகார் அளித்தார். அதன்பேரில் ஆரணி தாலுகா போலீசார் வழக்குப்பதிவு செய்து மேலும் விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story