வடிகால் வசதி இல்லாததால் அசுத்தமாகும் குளம்


வடிகால் வசதி இல்லாததால் அசுத்தமாகும் குளம்
x

வடிகால் வசதி இல்லாததால் அசுத்தமாகும் குளம்

திருவாரூர்

ஓகைப்ேபரையூரில் வடிகால் வசதி இல்லாததால் குளம் அசுத்தமாகி வருகிறது. எனவே குளத்தை சுத்தம் செய்து தர வேண்டும் என கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

ஆலடி குளம்

கூத்தாநல்லூர் அருகே உள்ள ஓகைப்பேரையூரில் உள்ளது ஆலடி குளம். இந்த குளத்தினை சுமார் 80 ஆண்டுகளுக்கும் மேலாக குளிப்பதற்கும், துணிகள் துவைப்பதற்கும் அந்த பகுதி மக்கள் பயன்படுத்தி வருகின்றனர். ஆற்றில் தண்ணீர் இல்லாத காலங்களிலும் இந்த குளத்தில் சுத்தமான தண்ணீரை தேக்கி வைத்து கோடை காலங்களிலும் பயன்படுத்தும் வழக்கம் இருந்து வருகிறது.

மேலும் ஆற்றில் இருந்து வரும் தண்ணீரை இந்த குளத்திற்கு கொண்டு சென்று தேக்கி வைப்பதற்கும், தேவையற்ற தண்ணீரை வெளியேற்றுவதற்கும் வடிகால் வாய்க்கால் வசதிகள் அமைக்கப்பட்டது.

வடிகால் வாய்க்கால்

இந்தநிலையில் வடிகால் வாய்க்கால் ஆக்கிரமிப்புகளில் சிக்கி மேடாகி விட்டதால், தேவையற்ற தண்ணீரை வெளியேற்ற முடியாமல் உள்ளது. இதனால் குளத்தில் பல மாதங்களாக தேங்கி நிற்கும் மாசு படர்ந்திருக்கும் தண்ணீர் அசுத்தமான தண்ணீராக மாறி விடுவதாகவும், இதனால் தண்ணீரில் குளிப்பதற்கும், துணிகள் துவைப்பதற்கும் பயன்படுத்த முடியாத நிலை ஏற்பட்டு உள்ளதாகவும் அந்த பகுதி மக்கள் கூறுகின்றனர்.

சுத்தம் செய்து தர வேண்டும்

மேலும் அசுத்தமான தண்ணீரால் துர்நாற்றம் வீசுவதாகவும், இதனால் கொசு உற்பத்தி அதிகரித்து சுகாதார கேடும், தொற்றுநோய் பரவும் அபாயமும் உள்ளது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து அசுத்தமாக குளத்தை சுத்தம் செய்து தர வேண்டும். மேலும் வடிகால் வாய்க்கால்களை சீரமைத்து சுத்தமான தண்ணீரை தேக்கி வைப்பதற்கு போதிய பராமரிப்பு செய்து தர வேண்டும் என்று கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


Related Tags :
Next Story