விபத்தில் வாலிபர் பலி

சிவகாசி அருகே விபத்தில் வாலிபர் பலியானார்.
விருதுநகர்
சிவகாசி,
சிவகாசி பள்ளப்பட்டி விவேகானந்தர்காலனியை சேர்ந்தவர் மகாலிங்கம் மகன் வடிவேல் (வயது 38). இவர் பழைய பேப்பர் வியாபாரம் செய்து வந்தார். இந்த நிலையில் சம்பவத்தன்று சிவகாசி-திருத்தங்கல் ரோட்டில் மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்த போது அந்த வழியாக வந்த ஆட்டோவை வடிவேல் முந்தி செல்ல முயன்றார். அப்போது ஆட்டோவில் மோதி நிலைதடுமாறி கீழே விழுந்துள்ளார். இதில் அவருக்கு தலையில் காயம் ஏற்பட்டதாக கூறப்படுகிறது. அருகில் இருந்தவர்கள் அவரை மீட்டு மதுரை பெரிய ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்த்தனர். அங்கு அவர் சிகிச்சை பலன் அளிக்காமல் பரிதாபமாக இறந்தார். இந்த விபத்து குறித்து சிவகாசி டவுன் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி விபத்துக்கு காரணமான ஆட்டோ டிரைவரை தேடி வருகிறார்கள்.
Related Tags :
Next Story