போதை ஊசி விற்ற வழக்கில் 3 முறை தப்பி ஓடிய வாலிபர் கைது

போதை ஊசி விற்ற வழக்கில் 3 முறை தப்பி ஓடிய வாலிபர் கைது
அந்தியூர்
அந்தியூர் அருகே உள்ள சிந்தகவுண்டம்பாளையத்தில் ஒரு வாலிபர் போதை ஊசி விற்பதாக தகவல் கிடைத்தது. அதன்பேரில் இன்ஸ்பெக்டர் செந்தில்குமார் போலீசாருடன் சிந்தகவுண்டம்பாளையம் சென்று பாலாஜி (வயது 27) என்பவரை பிடித்து விசாரணை நடத்தினர். அப்போது போலீசார் விசாரணை நடத்திக்கொண்டு இருந்தபோதே அவர் தப்பி ஓடிவிட்டார். இதுபோல் அவர் 3 முறை போலீசாரிடம் சிக்காமல் தப்பிவிட்டார்.
இந்தநிலையில் நேற்று மதியம் 1 மணி அளவில் பாலாஜி பூனாச்சி பஸ்நிறுத்தத்தில் வெளியூர் செல்ல நிற்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து போலீசார் அங்கு விரைந்து சென்று பாலாஜியை கைது செய்தனர். அவரிடம் விசாரணை நடத்தியபோது, மும்பையில் இருந்து பாலாஜி போதை ஊசி வாங்கி வந்து விற்றதும், தனக்குத்தானே போட்டுக்கொண்டதும் உறுதியானது. இதையடுத்து போலீசார் பாலாஜியை கைது செய்து, பவானி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.