ராமநத்தம் தேசிய நெடுஞ்சாலையில்கரும்பு ஏற்றி வந்த டிராக்டர் கவிழ்ந்ததுபோக்குவரத்து பாதிப்பு

ராமநத்தம் தேசிய நெடுஞ்சாலையில் கரும்பு ஏற்றி வந்த டிராக்டர் கவிழ்ந்ததால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
கடலூர்
ராமநத்தம்,
கள்ளக்குறிச்சி மாவட்டம் தியாகதுருகம் அடுத்த பொரசக்குறிச்சியில் இருந்து கரும்புகளை ஏற்றிக் கொண்டு டிராக்டர் ஒன்று பெரம்பலூர் மாவட்டம் எறையூர் சர்க்கரை ஆலையை நோக்கி புறப்பட்டது. டிராக்டரை பொரசக்குறிச்சியை சேர்ந்த ஜெகதீஸ்வரன் (வயது 40) என்பவர் ஓட்டினார். அந்த டிராக்டர் நேற்று இரவு கடலூர் மாவட்டம் ராமநத்தம் திருச்சி-சென்னை தேசிய நெடுஞ்சாலையில் சென்றபோது, டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து திடீரென சாலையில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதுபற்றி தகவல் அறிந்த ராமநத்தம் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து விபத்துக்குள்ளான டிராக்டர் மற்றும் சாலையில் கிடந்த கரும்புகளை அகற்றினர். இந்த விபத்தில் டிரைவர் ஜெகதீஸ்வரன் லேசான காயத்துடன் உயிர் தப்பினார். மேலும் இந்த சம்பவம் காரணமாக அப்பகுதியில் ½ மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
Related Tags :
Next Story