தொட்டபெட்டா சிகரத்தில் இருந்து குதித்து தற்கொலை செய்த பெண்..! அதிர்ச்சியில் சுற்றுலா பயணிகள்

சுற்றுலா தளமான தொட்டபெட்டா மலையில் இருந்து குதித்து பெண் தற்கொலை செய்து கொண்டார்.
ஊட்டி:
தென்னகத்தின் மிக உயரமான சிகரமாக தொட்டபெட்டா அமைந்து உள்ளது. தொட்டபெட்டா வரும் சுற்றுலா பயணிகள் ஊட்டி கோவை இயற்கை அழகை கண்டு ரசித்து செல்கின்றனர். இன்று இந்த தொட்டபெட்டா சிகரம் பகுதிக்கு ஏராளமான சுற்றுலா பயணிகள் ஏராளமானோர் வருகை தந்தனர்.
அங்குள்ள சுற்றுலா பயணிகள் தடுத்தும் நிற்காமல் தடுப்பை தாண்டி சென்றார். அப்போது கண் இமைக்கும் நேரத்தில் சிகரத்தில் இருந்து 350 அடி பள்ளத்தில் குதித்து தற்கொலை செய்து கொண்டார்.
இந்த தகவலை அந்த பகுதி வனத்துறையினர் புகாரின் பேரில் ஊட்டி தீ அணைப்பு படையினர் சென்று சிகரத்தில் குதித்த பெண்ணை பலத்த காயத்துடன் உயிர் இழந்த நிலையில் மீட்டனர்.
இந்நிலையில் ஊட்டி போலீசார் மேற்கொண்ட விசாரணையில் அவர் கோவை தடாகம் சேர்ந்த லீலாவதி என்பது தெரியவந்தது. இவர் கணவர் நடராஜ். லீலாவதி கோவையில் இருந்து பஸ்சில் ஊட்டிக்கு வந்து அங்கிருந்து ஒரு ஆட்டோ மூலம் தொட்டபெட்டா வந்து உள்ளார்.
அவர் தற்கொலை செய்யும் முன்பு ஆதார் கார்டு அடையாள விவரங்களை குதித்த இடத்தில் வைத்து விட்டு தற்கொலை செய்து உள்ளார். மேலும் தற்கொலை செய்து கொண்டதற்கான காரணம் குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.