பெரியகுளம் அருகே மின்சாரம் பாய்ந்து தொழிலாளி பலி

பெரியகுளம் அருகே மின்சாரம் பாய்ந்து தொழிலாளி பலியானார்.
தேனி
பெரியகுளம் அருகே உள்ள இ.புதுக்கோட்டையை சேர்ந்தவர் அஸ்வின் (வயது 25). கட்டிட தொழிலாளி. நேற்று இவர், பெரியகுளம் அருகே உள்ள பாரதிநகரில் புதிதாக கட்டப்பட்டு வரும் வீட்டிற்கு வேலைக்கு சென்றார்.
அங்கு வேலை செய்து கொண்டிருந்தபோது, வீட்டின் அருகில் சென்ற மின்சார கம்பி எதிர்பாராத விதமாக அஸ்வின் மீது பட்டது. இதில் மின்சாரம் பாய்ந்து, அவர் தூக்கிவீசப்பட்டார். இதையடுத்து அவரை அக்கம்பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக பெரியகுளம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.
அங்கு பரிசோதனை செய்த டாக்டர்கள், அஸ்வின் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர். இதுகுறித்து பெரியகுளம் தென்கரை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Related Tags :
Next Story