காதல் திருமணம் செய்த இளம்பெண் தற்கொலை முயற்சி


காதல் திருமணம் செய்த இளம்பெண் தற்கொலை முயற்சி
x

ஜோலார்பேட்டை அருகே காதல் திருமணம் செய்த இளம்பெண் தூக்குப்போட்டு தற்கொலைக்கு முயன்றார். இதுதொடர்பாக அவரது காதலனை போலீசார் கைது செய்தனர்.

திருப்பத்தூர்

காதல் திருமணம்

ஜோலார்பேட்டை பகுதியை சேர்ந்த 17 வயது இளம்பெண் வாணியம்பாடி அருகே உள்ள வள்ளிப்பட்டு பகுதியில் உள்ள உறவினர் வீட்டுக்கு சென்றபோது, அதே பகுதியை சேர்ந்த தமிழரசன் என்பவரின் மகன் கார்த்திக் (வயது 19) என்பவருடன் நட்பு ஏற்பட்டு, இருவரும் காதலித்து வந்துள்ளனர். இந்தநிலையில் கடந்த 10-ந் தேதி இருவரும் வீட்டை விட்டு வெளியேறி திருமணம் செய்து கொண்டு கோயம்புத்தூரில் தங்கி இருந்ததாக கூறப்படுகிறது.

இது குறித்து பெண்ணின் தாயார் ஜோலார்பேட்டை போலீஸ் நிலையத்தில் கொடுத்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப் பதிவு செய்து அவர்கள் இருவரையும் அழைத்து வந்து இளம்பெண்ணை பெற்றோருடன் அனுப்பி வைத்தனர்.

இந்த நிலையில் நேற்று முன்தினம் மாலை காதலனை பிரிந்ததால் மன உளைச்சலில் இருந்த இளம்பெண் வீட்டின் அறையில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொள்ள முயன்றுள்ளார்.

காதலன் கைது

இதை பார்த்த அவரது குடும்பத்தினர் அவரை மீட்டு சிகிச்சைக்காக திருப்பத்தூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். பின்னர் அங்கிருந்து அவர் மேல் சிகிச்சைக்காக தர்மபுரி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டு அங்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இதுகுறித்து இளம்பெண்ணின் தாயார் கொடுத்த புகாரின் பேரில் தற்கொலை முயற்சிக்கு தூண்டுதலாக இருந்ததாக வழக்குப் பதிவு செய்து கார்த்திக்கை நேற்று கைது செய்து திருப்பத்தூர் கோர்ட்டில் ஆஜர் படுத்தி சிறையில் அடைத்தனர்.


Next Story