தலைமறைவான பெண் மேலாளர் கைது

தனியார் நிதி நிறுவனத்தில் ரூ.98 லட்சம் மோசடி வழக்கில் தலைமறைவான பெண் மேலாளர் கைது செய்யப்பட்டார்.
ஊட்டி
தனியார் நிதி நிறுவனத்தில் ரூ.98 லட்சம் மோசடி வழக்கில் தலைமறைவான பெண் மேலாளர் கைது செய்யப்பட்டார்.
மோசடி
நீலகிரி மாவட்டம் மஞ்சூரில் தனியார் நிதி நிறுவனம் செயல்பட்டு வருகிறது. இங்கு மேலாளராக சாந்திபிரியா(வயது 34), நகை மதிப்பீட்டாளராக ராஜூ(32), கணக்காளராக நந்தினி(30), கணினி ஆபரேட்டராக விஜயகுமார்(32) ஆகியோர் பணியாற்றி வந்தனர். இவர்கள் கடந்த ஆண்டு மார்ச் மாதம் 9-ந் தேதி முதல் செப்டம்பர் மாதம் 1-ந் தேதி வரையிலான காலக்கட்டத்தில், நிறுவனத்தில் அடகு வைத்திருந்த 81 வாடிக்கையாளர்களின் தங்க நகைகளை எடுத்துக்கொண்டு அதற்கு பதிலாக போலி நகைகளை வைத்து மோசடி செய்துள்ளனர். இதற்கு பல்வேறு போலி ஆவணங்களை தயாரித்துள்ளனர். பின்னர் நடைபெற்ற தணிக்கையில் ரூ.98 லட்சம் வரை மோசடி செய்யப்பட்டு இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.
கைது
இதுகுறித்து நீலகிரி மாவட்ட குற்றப்பிரிவு போலீசில் புகார் செய்யப்பட்டது. அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து, ராஜூ, நந்தினி, விஜயகுமார் ஆகியோரை கைது செய்தனர்.
ஆனால் சாந்திபிரியா மட்டும் தலைமறைவாக இருந்தார். அவரை இன்ஸ்பெக்டர் அம்சவேணி தலைமையிலான தனிப்படை போலீசார், கர்நாடகா, கேரளா உள்பட பல இடங்களில் தேடி வந்தனர். இதையடுத்து ஊட்டிக்கு வந்திருந்த சாந்திபிரியாவை போலீசார் கைது செய்தனர். தொடர்ந்து ஊட்டி கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். அவரது தந்தை நடராஜன் பிக்கட்டி பேரூர் தி.மு.க. செயலாளர் என்பது குறிப்பிடத்தக்கது.