போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில்தியாகிகள் தின உறுதி மொழி ஏற்பு
தூத்துக்குடி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில்தியாகிகள் தின உறுதி மொழி ஏற்பு நிகழ்ச்சி நடைபெற்றது.
தூத்துக்குடி
தூத்துக்குடி மாநகராட்சியில் தியாகிகள் தினம், தொழுநோய் ஒழிப்பு உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சி நடந்தது. நிகழ்ச்சிக்கு மாநகராட்சி மேயர் ஜெகன் பெரியசாமி தலைமை தாங்கினார். ஆணையாளர் சாருஸ்ரீ முன்னிலை வகித்தார். நிகழ்ச்சியில் மாநகராட்சி அதிகாரிகள், ஊழியர்கள் கலந்து கொண்டு உறுதிமொழி ஏற்றுக் கொண்டனர்.
இதே போன்று தூத்துக்குடி மாவட்ட போலீஸ் துறை அலுவலகத்தில் போலீஸ் சூப்பிரண்டு எல். பாலாஜி சரவணன் தலைமையில் போலீசார் மற்றும் அமைச்சுப்பணியாளர்கள் கலந்து கொண்டு உறுதிமொழி ஏற்றனர். நிகழ்ச்சியில் தூத்துக்குடி மாவட்ட தலைமையிடத்து கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு கார்த்திகேயன், மாவட்ட போலீஸ் கட்டுப்பாட்டு அறை இன்ஸ்பெக்டர் ரேனியஸ் ஜேசுபாதம், மாவட்ட குற்றப்பிரிவு போலீஸ் இன்ஸ்பெக்டர் அந்தோணியம்மாள், நிர்வாக அதிகாரிகள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
Related Tags :
Next Story