மினிவேன் மோதி வாலிபர் சாவு

மினிவேன் மோதி வாலிபர் உயிரிழந்தார்.
திருப்புவனம்,
பூவந்தி போலீஸ் சரகம் ஏனாதி கிராமத்தை சேர்ந்தவர் முனிச்சாமி என்ற நல்லாள் (வயது 60). இவரது மகன் அன்புசிவராமன் (25). இவர் மதுரை 6-வது பட்டாலியனில் போலீசாக வேலை பார்த்து வருகிறார். தற்போது ராமேசுவரம் கோவிலில் பாதுகாப்பு பணி புரிந்து வருகிறார். சம்பவத்தன்று தனது மைத்துனர் மருதுபாண்டியுடன் மேலப்பூவந்தியில் உள்ள தனது சகோதரி வீட்டுக்கு மோட்டார் சைக்கிளில் வந்தார். கீரனூர் விலக்கு அருகே செல்லும்போது சிவகங்கையில் இருந்து வந்த மினி வேன் மோட்டார்சைக்கிள் மீது மோதியது. இதில் போலீஸ்காரர் அன்பு சிவராமனும், மருதுபாண்டியும் படுகாயம் அடைந்தனர். அவர்கள் மதுரை அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டனர். அங்கு சிகிச்சை பலனின்றி மருதுபாண்டி இறந்தார். இந்த விபத்து குறித்து பூவந்தி போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ஜெயக்கண்ணன் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.