உடுமலை எலையமுத்தூர் பிரிவில் வேகத்தடை அகற்றியதால் விபத்துக்கள் ஏற்பட்டு வரும் நிலையில் அதனை மீண்டும் அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

உடுமலை எலையமுத்தூர் பிரிவில் வேகத்தடை அகற்றியதால் விபத்துக்கள் ஏற்பட்டு வரும் நிலையில் அதனை மீண்டும் அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
x

உடுமலை எலையமுத்தூர் பிரிவில் வேகத்தடை அகற்றியதால் விபத்துக்கள் ஏற்பட்டு வரும் நிலையில் அதனை மீண்டும் அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

திருப்பூர்

போடிப்பட்டி

உடுமலை எலையமுத்தூர் பிரிவில் வேகத்தடை அகற்றியதால் விபத்துக்கள் ஏற்பட்டு வரும் நிலையில் அதனை மீண்டும் அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

சுற்றுலா தலங்கள்

உடுமலையிலிருந்து திருமூர்த்திமலை, அமராவதி, கேரள மாநிலம் மூணாறு உள்ளிட்ட முக்கிய சுற்றுலா தலங்களுக்கு செல்லும் வழித்தடமாக தளி சாலை உள்ளது. இதனால் இந்த வழித்தடத்தில் தினசரி ஏராளமான வாகனங்கள் சென்று வருகின்றன. இதுதவிர 4 வழிச்சாலைக்கு மண் எடுக்கும் பணியில் ஈடுபட்டுள்ள நூற்றுக்கணக்கான லாரிகள் இந்த வழித்தடத்தில் இயக்கப்படுகின்றன.

இந்த சாலையில் எலையமுத்தூர் பிரிவு பகுதியிலிருந்து உடுமலை ஆர்டிஓ அலுவலகம், வட்டார போக்குவரத்து அலுவலகம், தொழிற்பயிற்சி கல்லூரி மற்றும் அரசு கலைக்கல்லூரி ஆகிய பகுதிகளுக்கு செல்ல முடியும்.இதனால் எப்போதும் போக்குவரத்து மிகுந்த சாலையாக இது உள்ளது.

விபத்துக்கள்

இந்த பகுதியில் தனியார் பள்ளி, பெட்ரோல் பங்க் ஆகியவையும் அமைந்துள்ளது. இதனைக் கருத்தில் கொண்டு, பொதுமக்கள் மற்றும் மாணவர்களின் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையிலும், விபத்துகளைத் தவிர்க்கும் வகையிலும் எலையமுத்தூர்பிரிவு பகுதியில் வேகத்தடை அமைக்கப்பட்டிருந்தது. கடந்த சில மாதங்களுக்கு முன் வேகத்தடை அகற்றப்பட்டது. ஆனால் இந்த வேகத்தடை மீண்டும் அமைக்கப்படவில்லை. இதனால் இந்த பகுதியில் அதிக வேகத்தில் இயக்கப்படும் வாகனங்களால் அவ்வப்போது சிறு சிறு விபத்துக்கள் நடைபெற்று வருகிறது. பெரிய அளவிலான விபத்துக்கள் ஏற்பட்டு உயிரிழப்புகள் ஏற்படும் முன் இங்கு மீண்டும் வேகத்தடை அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.அத்துடன் வேகத்தடையை அடையாளப்படுத்தும் விதமான வெள்ளை குறியீடுகள் மற்றும் அறிவிப்புப் பலகை வைக்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கூறினர்.

---

2 காலம்

வேகத்தடை அகற்றப்பட்ட, போக்குவரத்து நிறைந்த எலையமுத்தூர் பிரிவு பகுதியை படத்தில் காணலாம்.

Next Story