பரமக்குடி மாணவி சாதனை

பரமக்குடி மாணவி சாதனை படைத்தார்.
பரமக்குடி,
ராமநாதபுரம் மாவட்ட தடகள சங்கத்தின் சார்பில் மாவட்ட அளவிலான தடகள போட்டிகள் ராமநாதபுரம் சீதக்காதி விளையாட்டு மைதானத்தில் நடந்தது. இதில் மாவட்டத்திலிருந்து ஏராளமான பள்ளிகளை சேர்ந்த மாணவ, மாணவிகள் பங்கேற்றனர்.
இதில் குண்டு எறியும் போட்டியில் பரமக்குடியை சேர்ந்த மாணவி சர்மிளா முதலிடம் பெற்று சாதனை படைத்துள்ளார். அவருக்கு மாநில தடகள சங்கத்தின் இணை செயலாளர் இன்பா ரகு, பதக்கம், சான்றிதழ், வழங்கினார். இதில் டாக்டர் ஆஷிக் அமின், கிருஷ்ணா இன்டர்நேஷனல் பள்ளியின் அட்மினிஸ்ட்ரேஷன் அதிகாரி ஹாசித், ஆடிட்டர் ராமகிருஷ்ணன் ஆகியோர் கலந்து கொண்டனர்.
வெற்றி பெற்ற மாணவ, மாணவிகள் வரும் 15-ந் தேதி திருவண்ணாமலையில் நடக்க உள்ள மாநில அளவிலான போட்டியில் கலந்து கொள்ள உள்ளனர் என மாவட்ட தடகள சங்கத்தின் செயலாளரும், மாநில தடகள சங்கத்தின் இணை செயலாளருமான இன்பா ரகு தெரிவித்தார்.