100 நாள் வேலை நடக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்


100 நாள் வேலை நடக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்
x

அனைத்து ஊராட்சிகளிலும் 100 நாள் வேலை நடக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று திருமருகல் ஒன்றியக்குழு கூட்டத்தில் கவுன்சிலர் கோரிக்கை விடுத்தார்.

நாகப்பட்டினம்

திட்டச்சேரி:

அனைத்து ஊராட்சிகளிலும் 100 நாள் வேலை நடக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று திருமருகல் ஒன்றியக்குழு கூட்டத்தில் கவுன்சிலர் கோரிக்கை விடுத்தார்.

ஊராட்சி ஒன்றியக்குழு கூட்டம்

நாகை மாவட்டம் திருமருகல் ஊராட்சி ஒன்றியக்குழு கூட்டம் நடைபெற்றது. கூட்டத்துக்கு ஒன்றியக்குழு தலைவர் ராதாகிருட்டிணன் தலைமை தாங்கினார். ஒன்றிய ஆணையர் பாலமுருகன், வட்டார வளர்ச்சி அலுவலர் (கிராம ஊராட்சி) பாத்திமா ஆரோக்கியமேரி மற்றும் ஒன்றியக்குழு உறுப்பினர்கள் கலந்து கொண்டனர். கூட்டத்தில் உறுப்பினர்கள் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினர்.இதன் விவரம் வருமாறு:-

இளஞ்செழியன்(தி.மு.க.): திருமருகல் ஒன்றியத்தில் பாம்பு கடித்து இறப்பவர்களின் இழப்பை தடுக்க திருமருகலில் விஷமுறிப்பு தடுப்பூசிகள் கையிருப்பு வைக்க வேண்டும். திருமருகல் ஒன்றியத்தில் பல பகுதிகளில் மின்கம்பங்கள், மின்கம்பிகள் சேதமடைந்து ஆபத்தான நிலையில் உள்ளது. எனவே இதை கவனித்து சரி செய்ய வேண்டும். திருமேனி(துணை தலைவர்): ஏனங்குடி ஊராட்சியில் 100 நாள் வேலை 4 இடங்களில் நடைபெறுவது போல் அனைத்து ஊராட்சிகளிலும் நடைபெற நடவடிக்கை எடுக்க வேண்டும்.

பாராட்டு

சரவணன்(தி.மு.க.): மிகச்சிறப்பாக செஸ் ஒலிம்பியாட் போட்டிகளை நடத்தி முடித்த தமிழக அரசுக்கு பாராட்டு தெரிவித்து தீர்மானம் நிறைவேற்ற வேண்டும். சுல்தான்ஆரிப்(தி.மு.க.): திருப்பனையூர் வாய்க்காலில் கதவணை இல்லாமல் தண்ணீர் விவசாய நிலங்களில் புகுந்து விடுகிறது. இதை சரி செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும்.ராதாகிருட்டிணன் (ஒன்றியக்குழு தலைவர்): நரிமணம் ஊராட்சியை சிறப்பாக வழிநடத்தி ரூ.7 லட்சத்து 50 ஆயிரம் பரிசு பெற்றுத் தந்த வட்டார வளர்ச்சி அலுவலருக்கு பாராட்டு தெரிவித்தார். மேலும் உறுப்பினர்களின் கோரிக்கைகள் குறித்து உடனடியாக நடவடிக்கை எடுத்து சரி செய்யப்படும் என கூறினார். கூட்டத்தில் அனைத்து துறை அலுவலர்கள், ஒன்றியக்குழு உறுப்பினர்கள் கலந்து கொண்டனர். முடிவில் வட்டார வளர்ச்சி அலுவலர் பாத்திமா ஆரோக்கியமேரி நன்றி கூறினார்.


Next Story