சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் வழங்க நடவடிக்கை
சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
காரியாபட்டி,
காரியாபட்டி பேரூராட்சி கவுன்சிலர்கள் கூட்டம் பேரூராட்சி தலைவர் செந்தில் தலைமையில் நடைபெற்றது. செயல் அலுவலர் ஸ்ரீரவிக்குமார் முன்னிலை வகித்தார். கூட்டத்தில் பேரூராட்சி கவுன்சிலர்கள் லியாகத் அலி, செல்வராஜ், சங்கரேஸ்வரன், வசந்தா, சரஸ்வதி, நாகஜோதி, தீபா, ராமதாஸ், சத்தியபாமா, திருக்குமாரி, முத்துக்குமார் ஆகியோர் கலந்து கொண்டனர். . காரியாபட்டி அரசு மருத்துவமனையில் அடிப்படை வசதிகள் மற்றும் மருத்துவ பணியாளர்கள் கூடுதலாக நியமித்து, ஸ்கேன், எக்ஸ்ரே போன்ற வசதிகளும் உருவாக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் குறித்து கவுன்சிலர்கள் வலியுறுத்தினர். பேரூராட்சி தலைவர் செந்தில் கூறுகையில், காரியாபட்டி பேரூராட்சியில் ரூ.70 லட்சம் செலவில் 420 தெருவிளக்குகள் அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. காரியாபட்டியில் 3 இடங்களில் புதிய சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் நிலையம் அமைத்தும், செயல்படாமல் உள்ள 3 சுத்திகரிப்பு நிலையங்களும் பராமரிப்பு செய்து சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது என்றார்.