மாணவர் சேர்க்கை விழிப்புணர்வு ஊர்வலம்

பேட்டையில் மாணவர் சேர்க்கை விழிப்புணர்வு ஊர்வலம் நடைபெற்றது.
பேட்டை:
நெல்லை காந்திநகர் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளிக்கு மாணவர்களை சேர்ப்பது குறித்த விழிப்புணர்வு ஊர்வலம் நடைபெற்றது. நெல்லை மாநகராட்சி நெல்லை மண்டல சேர்மன் மகேஸ்வரி மாணவர் சேர்க்கை ஊர்வலத்தை தலைமை தாங்கி தொடங்கி வைத்தார்.
பள்ளியில் இந்த கல்வி ஆண்டு சேர்க்கப்படும் மாணவர்களின் பெயர்கள் குலுக்கல் முறையில் தேர்வு செய்யப்பட்டு முதல் மாணவருக்கு ரூ.3,000 ,இரண்டாவது மாணவருக்கு ரூ.2,000, மூன்றாவது மாணவருக்கு ரூ.1,500 பரிசாக வழங்கப்படுகிறது. மேலும் சிறப்பு பரிசாக ஆயிரம் ரூபாய் வழங்கப்படுகிறது. தொலைதூர மாணவர்களுக்கு இலவச பயணச்சலுகை வழங்கப்படுகிறது.
இதையொட்டி நடந்த நிகழ்ச்சியில் பள்ளி தலைமை ஆசிரியர் (பொ) சண்முகராஜ் வரவேற்றார். ராணி அண்ணா அரசு கலைக்கல்லூரி நிதி ஆளுநர் பிரான்சிஸ் முத்து, காந்திநகர் மக்கள் சங்க தலைவர், ஆசிரியர் பிரின்ஸ்பாய், முன்னாள் மாணவ-மாணவிகள், ஆசிரியர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.