அ.தி.மு.க. முன்னாள் எம்.எல்.ஏ.வை கடத்தி பணம் பறிப்பு குற்றவாளிகளை பிடிக்க 2 தனிப்படைகள்


அ.தி.மு.க. முன்னாள் எம்.எல்.ஏ.வை கடத்தி பணம் பறிப்பு  குற்றவாளிகளை பிடிக்க 2 தனிப்படைகள்
x

அ.தி.மு.க. முன்னாள் எம்.எல்.ஏ.வை கடத்தி பணம் பறித்த வழக்கில் குற்றவாளிகளை பிடிக்க 2 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளது.

ஈரோடு

புஞ்சைபுளியம்பட்டி

முன்னாள் அ.தி.மு.க. எம்.எல்.ஏ. எஸ்.ஈஸ்வரனை கடந்த 2 நாட்களுக்கு முன்பு மர்ம நபர்கள் 6 பேர் காரில் கடத்தி சென்றனர். மேலும் அவரை அடித்து துன்புறுத்தி ரூ.1 கோடியே 50 லட்சம் பறித்து சென்றதாக கூறப்படுகிறது. இது குறித்த புகாரின் பேரில் புஞ்சைபுளியம்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். மேலும் குற்றவாளிகளை பிடிக்க சத்தியமங்கலம் துணை போலீஸ் சூப்பிரண்டு சந்திரசேகர், புஞ்சைபுளியம்பட்டி போலீஸ் இன்ஸ்பெக்டர் அன்பரசு தலைமையில் 2 தனிப்படைகள் அமைக்கப்பட்டு்ள்ளன. இவர்கள் முன்னாள் எம்.எல்.ஏ.வை காரில் கடத்தி சென்று பணம் பறித்தவர்களை வலைவீசி தேடி வருகின்றனர்.


Next Story