டாஸ்மாக் ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்


டாஸ்மாக் ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்
x

டாஸ்மாக் ஊழியர்கள் ஆர்ப்பாட்டம் நடந்தது.

தஞ்சாவூர்

தஞ்சாவூர்:-

தஞ்சை மாவட்ட சி.ஐ.டி.யூ. டாஸ்மாக் ஊழியர் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் தஞ்சை ரெயில் நிலையம் அருகே நேற்று நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு சி.ஐ.டி.யூ. மாவட்ட துணைத்தலைவர் அன்பு தலைமை தாங்கினார். டாஸ்மாக் மாவட்ட செயலாளர் வீரையன், தலைவர் மதியழகன், பொருளாளர் பன்னீர்செல்வம் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.இதில் சி.ஐ.டி.யூ. மாநில செயலாளர் ஜெயபால், மாவட்ட தலைவர் கோவிந்தராஜ் ஆகியோர் கலந்து கொண்டு பேசினர். தஞ்சை மாவட்ட சி.ஐ.டி.யூ. டாஸ்மாக் சங்கத்தின் பொருளாளர் பன்னீர்செல்வம், மதுபானம், பீர் பாட்டில்கள் தராததால் அவர் மீது கொலை வெறி தாக்குதல் நடத்தியவர்கள் மீது வழக்குப்பதிவு செய்து உடனே கைது செய்ய வேண்டும். மேலும் இது தொடர்பாக தஞ்சை கிழக்கு போலீசில் புகார் அளித்தும் நடவடிக்கை எடுக்காத சிறப்பு சப்-இன்ஸ்பெக்டரை கண்டிப்பது. அனுமதி பெறாமல் பார் நடத்துபவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். ஊழியர்களின் இடமாற்றம் முறையை ரத்து செய்ய வேண்டும். தொழிற்சங்க நிர்வாகிகளை குறி வைத்து பழிவாங்கும் நடவடிக்கையை கைவிட வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டத்தில் கோஷங்கள் எழுப்பினர்.


Next Story