நிதி திட்ட விளக்க ஆலோசனை கூட்டம்


நிதி திட்ட விளக்க ஆலோசனை கூட்டம்
x

நிதி திட்ட விளக்க ஆலோசனை கூட்டம்

திருப்பூர்

உடுமலை

உடுமலையில் வேளாண்மை உள்கட்டமைப்பு நிதி திட்ட விளக்க ஆலோசனை கூட்டம் நடந்தது.

வேளாண்மை உள்கட்டமைப்பு நிதி திட்டம்

வேளாண்மை விற்பனை மற்றும் வேளாண் வணிகத்துறை சார்பில் வேளாண்மை உள்கட்டமைப்பு நிதி திட்டம் செயல்பாட்டில் உள்ளது. இந்த திட்டம் 2020-21-ம் ஆண்டு முதல்2032-33-ம் ஆண்டு வரை செயல்படுத்தப்படும். விவசாயிகள் தங்கள் விளைபொருட்களை சந்தை படுத்துவதற்கு தேவையான கட்டுமான வசதிகளை ஏற்படுத்தி கொள்வதற்காக இந்த திட்டத்தின் கீழ் வங்கி மூலம்கடனுதவி வழங்கப்பட்டு, வட்டியில் 3சதவீதம் சலுகை வழங்கப்படுகிறது. அதிகபட்சமாக ரூ.2 கோடி வரையிலான கடனுக்கு, 7ஆண்டு காலத்திற்கு, ஆண்டுக்கு 3 சதவீதம் வட்டிகுறைப்பு வழங்கப்படுகிறது. ரூ.2கோடிக்கு மேற்பட்ட கடனாக இருந்தால் ரூ.2கோடி வரையிலான தொகைக்கு மட்டும் 3 சதவீதம் வட்டிகுறைப்பு கட்டுப்படுத்தப்பட்டு வழங்கப்படுகிறது.

இந்த திட்டத்தில் தனிநபர், சுய உதவி குழுக்கள், உழவர் உற்பத்தியாளர் நிறுவனங்கள், கூட்டுறவு சங்கங்கள், வேளாண் விளை பொருட்கள் விற்பனை குழுமங்கள் ஆகியவை பயன்பெற தகுதியானவர்களாகும்.

ஆலோசனை கூட்டம்

இந்த நிலையில் உடுமலைதொழில் வர்த்தக சபையின் விவசாயப்பிரிவு சார்பில் வேளாண்மை உள்கட்டமைப்பு நிதி திட்ட விளக்க ஆலோசனை கூட்டம் வர்த்தகசபை கூட்ட அரங்கில் நடந்தது. இந்த திட்டம் குறித்து திருப்பூர் மாவட்டத்திலேயே முதல்முறையாக விவசாயிகள், வேளாண் அலுவலர்கள், வங்கி அலுவலர்கள் ஆகியோரை ஒருங்கிணைத்து நடத்தப்பட்ட கூட்டத்திற்கு பொள்ளாச்சி பாராளுமன்ற மன்ற ெதாகுதி கு.சண்முகசுந்தரம் எம்.பி., தலைமை தாங்கினார். உடுமலை தொழில் வர்த்தகசபை தலைவர் ஆர்.அருண்கார்த்திக் முன்னிலை வகித்தார். திருப்பூர் மாவட்ட முன்னோடி வங்கி, கனராவங்கி (திருப்பூர்) மேலாளர் டி.அலெக்சாண்டர், கோவை வேளாண்மை துணை இயக்குனர் (வேளாண் வணிகம்) க.சுந்தரவடிவேலு ஆகியோர் திட்ட விளக்கவுரையாற்றினர்.

மேலும் நபார்டு வங்கி பொதுமேலாளர் அசோக்குமார், கால்நடைபராமரிப்புதுறை உதவி இயக்குனர் டாக்டர் ஜெயராமன், பொள்ளாச்சி நாச்சிமுத்து பாலிடெக்னிக் கல்லூரி பேராசிரியர் நாகராஜ் ஆகியோர் பேசினர். மத்திய, மாநில அரசுகளின் மானிய திட்டங்கள் குறித்து உடுமலை அக்ரிபெரியசாமி, வேளாண் மதிப்பு கூட்டுதல் மற்றும் ஏற்றுமதி குறித்து கார்த்திகேயன் ஆகியோர் பேசினர். முடிவில் உடுமலை தொழில் வர்த்தகசபை செயலாளர் ஆடிட்டர் ஆர்.கந்தசாமி நன்றிகூறினார்.

கூட்டத்தில் வங்கி அலுவலர்கள், வேளாண்மை விற்பனை மற்றும் வேளாண் வணிகத்துறை, வேளாண்மைத்துறை,தோட்டக்கலைத்துறை, வேளாண் பொறியியல் துறை அலுவலர்கள், விவசாயிகள், தொழில் வர்த்தகசபையினர் உள்ளிட்டு 300-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

-


Next Story