பொது நலனில் அதிக அக்கறை கொண்டவர்களாக வக்கீல்கள் இருக்க வேண்டும்; ஓய்வு பெற்ற ஐகோர்ட்டு நீதிபதி கே.சந்துரு பேச்சு

பொது நலனில் அதிக அக்கறை கொண்டவர்களாக வக்கீல்கள் இருக்க வேண்டும்; ஓய்வு பெற்ற ஐகோர்ட்டு நீதிபதி கே.சந்துரு பேச்சு
x

வக்கீல்கள் பொது நலனில் அதிக அக்கறை கொண்டவர்களாக இருக்க வேண்டும் என்று அகில இந்திய வக்கீல் சங்க குமரி மாவட்ட மாநாட்டில் ஓய்வு பெற்ற ஐகோர்ட்டு நீதிபதி கே.சந்துரு கூறினார்.

கன்னியாகுமரி

நாகர்கோவில்,

வக்கீல்கள் பொது நலனில் அதிக அக்கறை கொண்டவர்களாக இருக்க வேண்டும் என்று அகில இந்திய வக்கீல் சங்க குமரி மாவட்ட மாநாட்டில் ஓய்வு பெற்ற ஐகோர்ட்டு நீதிபதி கே.சந்துரு கூறினார்.

மாநாடு

அகில இந்திய வக்கீல் சங்க குமரி மாவட்ட மாநாடு நாகர்கோவிலில் நேற்று நடந்தது. மாநாட்டிற்கு நாகர்கோவில் வக்கீல் சங்க முன்னாள் தலைவர் மரிய ஸ்டீபன் தலைமை தாங்கினார். ஓய்வு பெற்ற சென்னை ஐகோர்ட்டு நீதிபதி கே.சந்துரு மாநாட்டை தொடங்கி வைத்து பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-

இந்திய அரசியலமைப்பு அறம் சார்ந்ததாகும். வக்கீல்கள் மக்களின் அடிப்படை பிரச்சினைகளிலும் கவனம் கொண்டவர்களாக இருக்க வேண்டும். இந்திய அரசியல் அமைப்பின் மாண்பை காப்பாற்றுபவர்களாக வக்கீல்கள் விளங்க வேண்டும். இந்தியாவில் ரவுலட் சட்டத்தை எதிர்த்து மகாத்மா காந்தி ஒத்துழையாமை இயக்கத்தை தொடங்கினார். அப்போது அதில் இணைவதற்கு பல வக்கீல்கள் முன் வந்தனர்.

பொது நலனில்...

இந்தியாவிலேயே அதிக சம்பளம் பெற்று வந்த வக்கீல்கள் கூட மகாத்மா காந்தியின் ஒத்துழையாமை இயக்கத்தில் இணைய முன் வந்த போது தங்கள் தொழிலை ராஜினாமா செய்து விட்டு தான் இந்த இயக்கத்தில் இணைய வேண்டும் என்ற நிலை இருந்தது. ஒத்துழையாமை இயக்கம் என்பதே ஆங்கிலேயர்கள் கொண்டு வந்த சட்டத்தை எதிர்த்து தான் நடைபெற்றது.

வக்கீல்கள் பொது நலனில் அதிக அக்கறை கொண்டவர்களாக இருக்க வேண்டும்.

இவ்வாறு அவர் பேசினார்.

இந்த மாநாட்டில் மாநகராட்சி மேயர் மகேஷ் மற்றும் மூத்த வக்கீல்கள், வக்கீல் சங்க உறுப்பினர்கள் திரளாக கலந்து கொண்டனர்.

Next Story