பெண் சாவில் மர்மம் இருப்பதாக புகார்: உடலை வாங்க மறுத்து உறவினர்கள் போராட்டம்


பெண் சாவில் மர்மம் இருப்பதாக புகார்: உடலை வாங்க மறுத்து உறவினர்கள் போராட்டம்
x

பெண் சாவில் மர்மம் இருப்பதாக கூறி உடலை வாங்கி மறுத்து உறவினர்கள் போராட்டம் நடத்தியதால் கலெக்டர் அலுவலகத்தில் பரபரப்பு ஏற்பட்டது.

சேலம்

கூலி தொழிலாளி

சேலம் மாவட்டம் ஓமலூர் பேரூராட்சி சுகந்தம்நகர் பகுதியை சேர்ந்தவர் அஜித் (வயது 25). கூலி தொழிலாளி. இவருக்கும் அதே பகுதியை சேர்ந்த இளம் பெண் ஒருவருக்கும் கடந்த 4 மாதங்களுக்கு முன்பு திருமணம் நடந்தது. நேற்று முன்தினம் இளம்பெண் வீட்டில் தூக்கில் பிணமாக தொங்கிக்கொண்டிருந்தார்.

தகவல் அறிந்த ஓமலூர் போலீசார் பெண்ணின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு சேலம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இந்த நிலையில் பெண்ணின் சாவில் மர்மம் இருப்பதாக கூறி அவரது பெற்றோர், சகோதரி மற்றும் உறவினர் உடலை வாங்க மறுத்து நேற்று கலெக்டர் அலுவலக வாசல் முன்பு அமர்ந்து போராட்டம் நடத்தினர்.

Allegation of mystery in woman's death: Relatives refuse to buy the body and protest

இதுகுறித்து பெற்றோர் கூறும் போது, எங்கள் மகளுக்கு 16 வயது தான் ஆகிறது. பக்கத்து வீட்டில் இருந்த அஜித்திடம் பழக்கம் ஏற்பட்டு, 4 மாதத்திற்கு முன்பு திருமணம் செய்து கொண்டாள். இந்த நிலையில் அவள் இறந்து போனாள். எனவே எனது மகள் சாவில் மர்மம் உள்ளது. இதற்கு காரணமானவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறினர். இதைத்தொடர்ந்து போலீசார் அவர்களிடம் பேச்சு வார்த்தை நடத்தி கலைந்து போக செய்தனர்.

தொடர்ந்து உடலை வாங்க மறுத்து சேலம் அரசு ஆஸ்பத்திரி முன்பு அமர்ந்து போராட்டம் நடத்தினர். இதையடுத்து போலீசார் தொடர்ந்து பேச்சு வார்த்தை நடத்தினர். இதையடுத்து அவர்கள் போராட்டத்தை கைவிட்டு, பெண்ணின் உடலை பெற்றுச்சென்றனர். இதனால் சேலம் அரசு ஆஸ்பத்திரி மற்றும் கலெக்டர் அலுவலகம் ஆகிய இடங்களில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.


Next Story