சாலையின் தடுப்புச்சுவரில் ஆம்புலன்ஸ் மோதி விபத்து


சாலையின் தடுப்புச்சுவரில் ஆம்புலன்ஸ் மோதி விபத்து
x

சாலையின் தடுப்புச்சுவரில் ஆம்புலன்ஸ் மோதி விபத்துக்குள்ளானத்தில் டிரைவர் படுகாயம் அடைந்தார்

மயிலாடுதுறை

சென்னை ஸ்டான்லி அரசு ஆஸ்பத்திரியில் இருந்து உயிரிழந்த ஒருவரின் உடலை ஏற்றிக்கொண்டு மன்னார்குடி வந்த ஆம்புலன்ஸ் ஒன்று மீண்டும் நேற்று காலை சென்னை நோக்கி சென்று கொண்டிருந்தது. மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அருகே வைத்தீஸ்வரன் கோவில் பகுதியில் அந்த ஆம்புலன்ஸ் சென்று கொண்டிருந்தபோது டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து சாலையின் தடுப்புச்சுவரில் மோதி விபத்துக்குள்ளானது. இதில், அதன் டிரைவர் ஸ்ரீதருக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. அங்கிருந்தவர்கள் அவரை மீட்டு சிகிச்சைக்காக சீர்காழி அரசு ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த விபத்து குறித்து வைத்தீஸ்வரன் கோவில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.



Next Story