கால்நடை சுகாதார விழிப்புணர்வு முகாம்


கால்நடை சுகாதார விழிப்புணர்வு முகாம்
x

காரியாண்டியில் கால்நடை சுகாதார விழிப்புணர்வு முகாம் நடந்தது.

திருநெல்வேலி

இட்டமொழி:

நாங்குநேரி யூனியன் ராமகிருஷ்ணபுரம் பஞ்சாயத்து காரியாண்டியில் தமிழக அரசின் சிறப்பு கால்நடை சுகாதார விழிப்புணர்வு முகாம் மற்றும் கறவை மாடுகள் வளர்ப்பு பயிற்சி முகாம் நடைபெற்றது. முகாமில் கன்று பராமரிப்பு, சுத்தமான பால் உற்பத்தி, வருடம் ஒருகன்று, சினை பராமரிப்பு, நோய் மேலாண்மை, சினை ஊசியின் முக்கியத்துவம், கன்று வீச்சு நோய், கால்நடைகளுக்கு காப்பீடு, சரிவிகித தீவனம் கால்நடைகளுக்கு அளித்தல், தாதுஉப்பு பயன்படுத்துதல், தீவனம் அளித்தல் போன்ற பயிற்சி அளிக்கப்பட்டது.

ராமகிருஷ்ணபுரம் பஞ்சாயத்து தலைவர் வளர்மதி சேர்மத்துரை, கால்நடை டாக்டர்கள் கணேசன், கதிரவன் மற்றும் கறவை மாடு வளர்க்கும் விவசாயிகள் கலந்து கொண்டனர்.


Next Story