அண்ணன் பெருமாள் கோவில் ஆண்டு திருவிழா

அண்ணன் பெருமாள் கோவில் கருட வாகனத்தில் பெருமாள் எழுந்தருளினார்
மயிலாடுதுறை
சீர்காழி அருகே உள்ள அண்ணன் பெருமாள் கோவில் கிராமத்தில் அண்ணன் பெருமாள் கோவில் உள்ளது. திருப்பதி வெங்கடாசலபதிக்கு இவர் அண்ணன் என்பதால் அண்ணன் பெருமாள் என்று அழைக்கப்படுகிறார். திருப்பதி பெருமாளுக்கு நேர்த்திக் கடனுக்கு வேண்டிக் கொண்ட பக்தர்கள் இந்த கோவிலில் அதனை நிவர்த்தி செய்யலாம் என்பது ஐதீகம். மிகவும் பிரசித்தி பெற்ற இந்த கோவிலில் கடந்த வாரம் கொடியேற்றத்துடன் ஆண்டு திருவிழா தொடங்கியது. நேற்று பெருமாள் கருட வாகனத்தில் எழுந்தருளி காட்சியளித்தார். அப்போது திரளான பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர். இதற்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாக அதிகாரி குணசேகரன் மற்றும் விழா குழுவினர் செய்திருந்தனர்.
Related Tags :
Next Story